For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஏலத்தில் கலக்கிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி எக்ஸ்குளுசிவ் பேட்டி

சென்னை : ஐபிஎல் 2019 ஏலத்தை கலக்கிய வீரர் நம் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி.

டிஎன்பிஎல் தொடரில் ஆடி பிரபலம் ஆன அவர் ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலையாக 20 லட்சம் மட்டுமே கொண்டு பங்கேற்றார். ஆனால், முடிவில் 8.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு ஆச்சரியம் அளித்தார். யார் இந்த வருண் சக்ரவர்த்தி என அனைவரையும் கேட்க வைத்தார். அவரிடமே கேட்டு விடுவோமே..

வருண் சக்ரவர்த்தியுடன் ஒரு சிறப்பு நேர்காணல் -

ஆர்கிடெக்ட் டூ கிரிக்கெட் வீரர்

ஆர்கிடெக்ட் டூ கிரிக்கெட் வீரர்

கேள்வி : நீங்கள் இரு ஆர்கிடெக்ட் ஆக இருந்து கிரிக்கெட் வீரராக மாறியுள்ளீர்கள். அந்த மாற்றம் பற்றி சொல்ல முடியுமா?

பதில் : நான் சிறு வயதில் இருந்து டென்னிஸ் பாலில் கிரிக்கெட் ஆடி வந்தேன். எப்போதும் கிரிக்கெட் தான் என் முதல் காதல். பனிரெண்டாம் வகுப்பு முடித்த உடன் என் விருப்பத்தின் பின் என்னால் செல்ல முடியவில்லை. நிறைய படிக்க வேண்டி இருந்தது. என் வீட்டில் இருந்து SRM கல்லூரி மிக மிக அதிக தொலைவில் இருந்தது. கல்லூரிக்கு பின் 2 வருடம் வேலை செய்தேன். அதன் பின் மீண்டும் கிரிக்கெட் ஆட முடிவு செய்தேன். நீண்ட காலம் கிரிக்கெட் ஆடாமல் இருந்தது ஏதோ ஒன்றை நான் இழந்து விட்டேன் என்பது போல இருந்தது. அதனால், மீண்டும் கிரிக்கெட் ஆட வந்து விட்டேன்.

அந்த ஏழு வருடம்

அந்த ஏழு வருடம்

கே : ஏழு வருடம் கழித்து கிரிக்கெட் ஆட வந்து டிஎன்பிஎல் தொடரில் அனைவரையும் உங்களை கவனிக்க வைத்து, தமிழ்நாடு அணியில் இடம் பிடித்து இருக்கிறீர்கள். ஆனால், அந்த ஏழு வருடத்தில் கிரிக்கெட் பற்றி யோசிக்காமல் இருந்தீர்களா?

ப : ஆமாம். அப்போது கிரிக்கெட் என் மனதிலேயே இல்லை. பெரிய போட்டிகளை கூட நான் அப்போது பார்க்க மாட்டேன். எல்லோரும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காத்திருந்து பார்ப்பார்கள். ஆனால், அது கூட என்னை கிரிக்கெட் பார்க்க வைக்க தூண்டவில்லை. நான் வேலை செய்ய தொடங்கிய பின் தான் எனக்கு கிரிக்கெட் தான் பிடிக்கும் என்பதை உணர்ந்தேன். பின் வேலையே உதறி விட்டு மீண்டும் கிரிக்கெட் ஆட வந்தேன்.

சம்பாத்தியத்தை உதறியது ஏன்?

சம்பாத்தியத்தை உதறியது ஏன்?

கே : எது உங்களை ஆர்கிடெக்சர் போன்ற நல்ல சம்பாத்தியம் உள்ள ஒரு வேலையை உதற வைத்தது?

ப : எனக்கு நிச்சயம் ஆர்கிடெக்சர் பிடித்து தான் இருந்தது. ஆனால், அங்கே என் எண்ணங்களை வெளிப்படுத்த போதிய சுதந்திரம் இல்லை. அந்த துறையில் வேலை செய்வது சரியல்ல என எண்ணினேன். அங்கே என்ன வேலை பார்த்து, எவ்வளவு சாதித்தாலும் ஒரு மனத்திருப்தி கிடைக்கவில்லை. ஆனால், அது எனக்கு கீழ்நிலை கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் போது கூட கிடைத்தது. வெறுமனே, வலைப் பயிற்சியில் பந்து வீசும் போது கிடைத்தது. அந்த திருப்தி தான் என்னை மீண்டும் கிரிக்கெட்டை தேர்வு செய்ய வைத்தது. பணம் தான் முக்கியம் என்றால் நான் ஆர்கிடெக்ட் ஆகவே தொடர்ந்திருப்பேன்.

திருப்தி முக்கியம்

திருப்தி முக்கியம்

கே : ஆக, இது மனதை திருப்திப்படுத்த தான் நிகழ்ந்ததா?

ப : கண்டிப்பாக. நான், எப்போது கிரிக்கெட் ஆடினாலும் என் கவலைகள் எல்லாவற்றையும் மறந்து, அந்த கணத்தில் மூழ்கி விடுவேன். என் வீட்டருகில் ஒரு மைதானம் உள்ளது. நாங்கள் 5-6 அணிகள் இருக்கிறோம். எப்போதும் நாங்கள் டென்னிஸ் பால் கிரிக்கெட் ஆடுவோம். வார இறுதியில் 7 மணி நேரம் கூட ஆடுவோம். வாரம் முழுவதும் எப்போது வார இறுதி வரும் என காத்திருப்பேன். எப்போது கிரிக்கெட் ஆடி கவலைகளை மறந்து, மனதை அமைதியாக்கலாம் என காத்திருப்பேன்.

அடுத்த பகுதி விரைவில்

அடுத்த பகுதி விரைவில்

கே : பள்ளியில் கிரிக்கெட் ஆடிய பின்னர் மீண்டும் கிரிக்கெட் ஆட நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். எங்கே மீண்டும் ஆரம்பித்தீர்கள்?

இந்த நேர்காணலின் அடுத்த பகுதி விரைவில்...

Story first published: Wednesday, December 19, 2018, 19:12 [IST]
Other articles published on Dec 19, 2018
English summary
IPL auction 2019 - Tamilnadu Star player Varun Chakravarthy Exclusive Interview
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X