உங்க கேலண்டரில் குறிச்சுக்கோங்க… சென்னையில் ஏழு போட்டிகள்

By: SRIVIDHYA GOVINDARAJAN
இந்த ஐ.பி.எல். சீசனில் சென்னையில் போட்டிகள் இவைகள் தான் | Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் 11வது சீசன் ஏப்ரல் 7ம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்தியன் பிரீமியர் லீக் 11வது சீசன் போட்டிகள் வரும் ஏப்ரல் 7ம் தேதி துவங்குகிறது. இந்த முறை, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகின்றன.

7 matches in Chennai

மொத்தம் 8 அணிகள், 51 நாட்கள் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன.

ஐபிஎல் 11வது சீசனுக்கான போட்டி அட்டவணை நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 7ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் மோத உள்ளன.

இதில் சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் 7 போட்டிகள் நடக்க உள்ளன. இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னையில் போட்டிகள் நடக்க உள்ளதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த 7 போட்டிகளிலும் சென்னை அணி, எதிர் அணிகளுடன் விளையாட உள்ளது. ஏப்ரல் 10ம் தேதி கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோத உள்ளது. அடுத்தது, 20ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ், ஏப். 28ல் மும்பை இந்தியன்ஸ், ஏப். 30ல் டெல்லி டேர்டெவில்ஸ், மே 5ல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மே 13ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மே 20ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட உள்ளது.

Story first published: Thursday, February 15, 2018, 11:07 [IST]
Other articles published on Feb 15, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற