அம்பயர் எங்க பாஸ்.. காவிரியால் நடுவர்களை மறந்த ஐபிஎல் நிர்வாகம்.. தாமதமாக போடப்பட்ட டாஸ்

Posted By:

சென்னை: சென்னையில் நடக்கும் போட்டியில் கொல்கத்தா வீரர்களுடன் களத்திற்கு வர இருந்த அம்பயர்கள் அழைத்து வரப்படவில்லை. காவிரி போராட்டம் காரணமாக அம்பயர்களை அழைத்து வர ஐபிஎல் நிர்வாகம் மறந்துள்ளது.

கொல்கத்தா அணிக்கும் சென்னைக்கும் இடையில் இன்று ஐபிஎல் போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் செல்லும் வழியில் தற்போது காவிரி போராட்டம் நடக்கிறது.

இதனால் போட்டிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வீரர்கள் தனி வாகனத்தில் போலீஸ் பாதுகாப்பில் வந்தார்கள். ஆழ்வார்பேட்டையில் இருந்து 6 வாகன பாதுகாப்பில் அவர்கள் சென்னைக்கு வந்தார்கள்.

யாருடன்

யாருடன்

போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய நடுவர்கள், கொல்கத்தா வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் தங்கி இருக்கிறார்கள். கொல்கத்தா வீரர்கள் எழும்பூரில் இருந்த ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இருந்தார்கள். அங்கு இருந்து பேருந்தில் வீரர்கள், அம்பயர்கள் அழைத்து வரப்படுவதாக இருந்தது.

அழைத்து வர மறந்தனர்

அழைத்து வர மறந்தனர்

இந்த நிலையில் காவிரி போராட்டம் நடக்கும் பதட்டத்தில் வீரர்களை மட்டும் அழைத்து வந்து இருக்கிறார்கள். கொல்கத்தா பஸ்ஸில் வர வேண்டிய அம்பயர்களை ஐபிஎல் நிர்வாகம் அழைத்து வர மறந்து இருக்கிறது. இந்த விஷயம் மைதானத்திற்கு வந்த பின்பே ஐபிஎல் நிர்வாகத்திற்கு தெரிந்துள்ளது.

புதிய ஏற்பாடு

புதிய ஏற்பாடு

இந்த நிலையில் அவர்களுக்கு தனி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது அவர்கள் போலீஸ் வாகன பாதுகாப்பில் தனியாக அழைத்து வரப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர்கள் மைதானத்தை அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

போட்டி தாமதம்

போட்டி தாமதம்

இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. எல்லாம் போட்டியை காண தயாராகி இருக்கிறார்கள். அணி வீரர்கள் கடைசி நேர பயிற்சி முடித்து களத்தில் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அம்பயர் வராத காரணத்தால் போட்டி தாமதாமாக தொடங்கியது. சென்னை இப்போது பந்து வீச முடிவு எடுத்துள்ளது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
IPL committe forgot bring umpires with players due to cauvery protest.
Story first published: Tuesday, April 10, 2018, 19:57 [IST]
Other articles published on Apr 10, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற