For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சல்யூட் கேப்டன்.. திடீரென புதிய பெயர்களோடு களமிறங்கும் கோலி, ஏபிடி.. ஏன் இந்த முடிவு? செம காரணம்!

துபாய்: இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆர்சிபி மோத இருக்கும் போட்டியில் கோலி மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் இருவரும் புதிய பெயர்கள் கொண்டு டி ஷர்ட் அணிந்து விளையாட உள்ளனர்.

இன்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையில் ஐபிஎல் போட்டி நடக்கிறது. நேற்று போட்டி நடந்த அதே துபாய் மைதானத்தில் இன்று போட்டி நடக்க உள்ளது.

நேற்று நடந்த போட்டியில் பவுலிங்கிற்கு சாதகமாக பிட்ச் இருந்தது. இதனால் இன்றைய போட்டி லோ- ஸ்கோரிங் போட்டியாக இருக்கும் என்று கூறுகிறார்கள். பெங்களூர் அணி இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

இந்த நிலையில் இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆர்சிபி மோத இருக்கும் போட்டியில் கோலி மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் புதிய பெயர்கள் கொண்டு டி ஷர்ட் அணிந்து விளையாட உள்ளனர். ஆம் தங்கள் டி ஷர்டில் கோலி மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் என்பதற்கு பதிலாக சிம்ரான் ஜீத் மற்றும் பரிட்டோஷ் என்று எழுதி இருக்கும். கோலி மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் இந்த பெயர்கள் கொண்ட உடையை அணிய உள்ளனர்.

வாசகம் என்ன வாசகம்

வாசகம் என்ன வாசகம்

கொரோனாவிற்கு இடையே நாடு முழுக்க மக்களுக்காக உழைத்த நபர்களை பாராட்டும் விதமாக இந்த முன்னெடுப்பை இவர்களை செய்கிறார்கள். அதன்படி "My Covid Heroes" இவர்கள் இருவரின் உடையில் எழுதி இருக்கும். இந்த தொடர் முழுக்க இந்த "My Covid Heroes" என்ற வாசகம் இவர்கள் உடையில் எழுதப்பட்டு இருக்கும் .

ஏன் இப்படி

ஏன் இப்படி

இது தொடர்பாக கோலி அளித்துள்ள விளக்கத்தில், கடந்த சில மாதங்களாக, நாடு முழுக்க கொரோனாவிற்கு இடையே மக்கள் போராடி வருகிறார்கள். சிலர் கொரோனாவிற்கு இடையிலும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அவர்களை நினைத்து எனக்கு புல்லரிக்கிறது. அவர்களை பார்த்து பெருமை அடைகிறேன்.

பாராட்ட வேண்டும்

பாராட்ட வேண்டும்

அவர்களை பாராட்ட வேண்டும் என்பது எங்கள் நோக்கம். அதனால்தான் இந்த முன்னெடுப்பை தொடங்கி உள்ளோம். கொரோனாவிற்கு எதிராக நாடு முழுக்க போராடும் மக்களுக்கு ஆர்சிபி அணி உடன் நிற்கிறது. அவர்களின் போராட்டத்தில் பங்கெடுக்கிறது. இதை உணர்த்தும் வகையில் இவர்கள் இரண்டு பேரின் பெயர்கள் அடங்கிய உடையை அணிய இருக்கிறோம், என்று கோலி கூறியுள்ளார்.

என்ன பெயர்

என்ன பெயர்

இதில் ஏபிடி பரிட்டோஷ் என்ற பெயரில் விளையாட உள்ளார். பரிட்டோஷ் பேன்ட் என்று ஏபிடி தனது டிவிட்டர் பக்கத்தின் பெயரையும் மாற்றி இருக்கிறார். பரிட்டோஷ் என்பவர் மும்பையில் தனியார் ஹோட்டல் வைத்திருக்கும் நபர். கொரோனா காலத்தில் 'Project Feeding from Far' என்ற பெயரில் மக்களுக்கு உணவு வழங்கினார். மும்பையில் கஷ்டப்படும் மக்களுக்கு தேடி சென்று இவர் உதவினார்.

சிம்ரான் ஜீத் யார் ?

சிம்ரான் ஜீத் யார் ?

இன்னொரு பக்கம் சிம்ரான் ஜீத் என்ற பெயரில் கோலி விளையாட இருக்கிறார். கோலியும் தனது பெயரை டிவிட்டரில் சிம்ரான் ஜீத் என்று மாற்றி உள்ளார். செவி மாற்றுத் திறனாளியான இவர் தனது நண்பர்களோடு இணைந்து 98 ஆயிரம் ரூபாய் திரட்டி ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளார். சொந்த முயற்சியில் நிதி திரட்டி மக்களுக்கு உதவி செய்துள்ளார். இவர்கள் இருவரையும் பாராட்டும் வகையில் கோலி, ஏபிடி இருவரும் இன்று ஒரு நாள் மட்டும் இவர்களின் பெயர் கொண்ட உடைகளை அணிய உள்ளனர்.

Story first published: Monday, September 21, 2020, 16:09 [IST]
Other articles published on Sep 21, 2020
English summary
IPL: Kohli and ABD to play with different name today for RCB - Here is the reason
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X