For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யார் இந்த மஹீஷ் தீக்‌ஷணா? இலங்கை வீரரை எடுக்க தோனி ஸ்கெட்ச் போட்டது எதற்கு? சிக்கலில் சிஎஸ்கே அணி!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகீஷ் தீக்சணா என்ற இளம் வீரரை ஏலம் எடுத்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் தொடக்கத்தில் அமைதிகாத்த சிஎஸ்கே, கடைசி நேரத்தில் இளம் வீரர்களை அள்ளியது.

இந்நிலையில் அவர்கள் திடீரென இலங்கையை சேர்ந்த மகீஷ் தீக்‌ஷணா என்ற வீரரை வாங்கியதற்கு தான் தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

தமிழர்களை புறக்கணிக்கிறதா சிஎஸ்கே..?? கோவை பிரதர்ஸை ஏலத்தில் எடுத்த சென்னை..!! வாய்ப்பு கிடைக்குமா?தமிழர்களை புறக்கணிக்கிறதா சிஎஸ்கே..?? கோவை பிரதர்ஸை ஏலத்தில் எடுத்த சென்னை..!! வாய்ப்பு கிடைக்குமா?

திடீர் போர்க்கொடி

திடீர் போர்க்கொடி

தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் இலங்கை நாட்டை சேர்ந்த ஒரு வீரருக்கு நீங்கள் ஏன் வாய்ப்பு வழங்குகிறீர்கள் என்று கூறி, தமிழ் அமைப்புகள் இந்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தீக்சனாவை அணியிலிருந்து போராட்டம் வெடிக்கும் என்றும் தமிழகத்தில் இனி போட்டியை நடத்த விட மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டாகி வருகின்றன.

தோனியின் முடிவுக்கு காரணம்

தோனியின் முடிவுக்கு காரணம்

இந்நிலையில் சிஎஸ்கே அணிக்கு ஏன் ஒரு இலங்கை வீரரை தோனி தேர்வு செய்தார் என்பதை பார்க்கலாம். 21 வயதாகும் மஹீஷ் தீக்‌ஷணா, ஒரு ஆஃப் ஸ்பின்னர் ஆவார். கடந்தாண்டு செப்டம்பரில் இலங்கை அணி - தென்னாப்பிரிக்கா மோதிய போட்டியின் மூலம் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அவர், தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசரவைத்தார். அப்போட்டியில் 4/37 விக்கெட்டை சாய்த்து அசத்தினார்.

புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

இதுவரை இலங்கை அணிக்காக 4 ஒருநாள் போட்டிகளில் 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரின் எகானமி வெறும் 3.77 மட்டுமே ஆகும். இதே போல 11 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அவரின் எகானமி 6.42 மட்டுமே ஆகும்.

உள்நாட்டு தொடர்

உள்நாட்டு தொடர்

சர்வதேச போட்டிகளை விட உள்நாட்டு தொடர்களில் இவரின் ஆட்டம் இன்னும் சிறப்பாக உள்ளது. கடந்தாண்டு லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் அறிமுகமாகி, அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார். வெறும் 10 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை சாய்த்தார். அவரின் சராசரி 16.75 ரன்கள் ஆகும். எகானமி வெறும் 6.87 மட்டுமே ஆகும்.

கடினமான சூழல்

கடினமான சூழல்

ரூ.70 லட்சத்திற்கு இவரை விட சிறந்த வீரர் அணிக்கு கிடைக்க மாட்டார் என நம்பிய தோனி அவரை இந்த முறை சிஎஸ்கேவுக்குள் எடுத்துள்ளார். ஆனால் தற்போது வெளியேற்றப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தும் போது இலங்கையை சேர்ந்த யாரும் ஆட்டத்தில் இருக்க கூடாது என்றும், அப்படி இருந்தால் பாதுகாப்பு தர முடியாது என்றும் அதிரடியாக அறிவித்தார். தற்போது மீண்டும் அதே பிரச்சினை கிளம்பியுள்ளது.

Story first published: Tuesday, February 15, 2022, 12:27 [IST]
Other articles published on Feb 15, 2022
English summary
who is Maheesh theekshana, why csk captain dhoni targets Srilanka player in IPL mega auction 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X