அவர் எப்படி ஆடுறார் பாருங்க.. மிஸ்டர் ஐபிஎல்லை ஓரம்கட்ட துணியும் சிஎஸ்கே.. காரணம் இவர்தான்!

சென்னை: ஐபிஎல் தொடரில் ரெய்னா இறங்க வேண்டிய ஒன் டவுன் இடத்தில் உத்தப்பா இறங்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணி தீவிரமாக தயாராகி வருகிறது. புதிதாக அணிக்குள் 6 வீரர்கள் எடுக்கப்பட்டு இருப்பதால் அணி நிர்வாகம் உற்சாகத்தில் உள்ளது.

6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்!

கடந்த சீசனில் ஏற்பட்ட அவமானத்திற்கு இந்த சீசனில் பதிலடி கொடுக்கும் முடிவில் சிஎஸ்கே அணி இருக்கிறது. விரைவில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியை தொடங்க வாய்ப்புள்ளது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

தற்போது சிஎஸ்கே அணி வீரர்கள் எல்லோரும் முதல் தர போட்டிகளில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். சிஎஸ்கேவில் இருக்கும் தமிழக வீரர் ஜெகதீசன் நடந்து முடிந்த சையது முஷ்டாக் கோப்பை தொடரில் நன்றாக ஆடினார். அதன்பின் தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் நன்றாக ஆடி வருகிறார்.

எப்படி

எப்படி

இன்னொரு பக்கம் சிஎஸ்கேவை சேர்ந்த தமிழக வீரர் சாய் கிஷோர் தொடர்ந்து சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர், விஜய் ஹசாரே தொடர் இரண்டிலும் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். இன்னொரு பக்கம் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா சிறப்பாக ஆடி வருகிறார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

விஜய் ஹசாரே தொடரில் முதல் போட்டியில் சதம், அடுத்த போட்டியில் 80+ ரன்களை எடுத்து உத்தப்பா அசத்தி இருக்கிறார். உத்தப்பாவின் இந்த பார்ம் காரணமாக ரெய்னாவின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த இரண்டு வருடமாக ரெய்னா சரியாக கிரிக்கெட் ஆடவில்லை.

சையது முஷ்டாக்

சையது முஷ்டாக்

சையது முஷ்டாக் கோப்பை போட்டியிலும் இவரின் கேப்டன்சி நன்றாக இல்லை. இந்த தொடர் முழுக்க ரெய்னா மோசமாக திணறினார். தற்போது விஜய் ஹசாரே கோப்பை போட்டியிலும் இவர் சரியாக ஆடவில்லை. இதன் காரணமாக ரெய்னா இடத்தை உத்தப்பா பிடித்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

 ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் ரெய்னா இறங்க வேண்டிய ஒன் டவுன் இடத்தில் உத்தப்பா இறங்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. ரெய்னா சொதப்பும்பட்சத்தில் அவரை சிஎஸ்கே ஓரம்கட்ட அதிக வாய்ப்புகள் உள்ளது. உத்தப்பாவை அணிக்குள் கொண்டு வந்ததே இதற்குத்தான் என்கிறார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL Mini Auction 2021: Uththappa may take Raina spot in CSK due to his good form.
Story first published: Tuesday, February 23, 2021, 12:48 [IST]
Other articles published on Feb 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X