For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் பிக்சிங்கில் ஈடுபட்டது நிரூபணம்!

By Mathi

டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 4 வீரர்கள் பிக்சிங்கில் ஈடுபட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

பரபரப்பான ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவே ஸ்பாட் பிக்சிங், மேட்ச் பிக்சிங் விவகாரம் சூடு பிடித்தது. இந்த பிக்சிங்கில் ராஜஸ்தான் அணி வீரர்களே சிக்கினர்.

பிக்ஸிங்கில் ஈடுபட்டு சிக்கிய 4 வீரர்கள்

பிக்ஸிங்கில் ஈடுபட்டு சிக்கிய 4 வீரர்கள்

ஐபிஎல் பிக்சிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், அஜித் சான்டிலா, அங்கீத் சவான், அமித் சிங் ஆகியோர் சிக்கி சிறைக்குப் போய் வந்தனர்.

விசாரணை ஆணையம்

விசாரணை ஆணையம்

இந்த 4 பேர் மீதான வழக்கு ஒருபுறம் நடந்து வந்தாலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரவி சவானி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

விசாரணையில் நிரூபணம்

விசாரணையில் நிரூபணம்

இந்த ஆணைய விசாரணையின் போது 4 வீரர்களுமே ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

5 ஆண்டுகால தடைக்கு பரிந்துரை

5 ஆண்டுகால தடைக்கு பரிந்துரை

அத்துடன் பிக்சிங்கில் ஈடுபட்ட 4 வீரர்களுக்கு 5 ஆண்டுகாலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கவும் விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இன்று ஆலோசனை

இன்று ஆலோசனை

இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் டெல்லியில் இன்று கூடி ஒரு நபர் ஆணையம் அளித்த அறிக்கையை பரிசீலித்து முடிவு செய்ய உள்ளது.

Story first published: Friday, September 13, 2013, 13:01 [IST]
Other articles published on Sep 13, 2013
English summary
The fate of the cricketers implicated in the IPL spot-fixing scandal would be up for discussion when the BCCI’s disciplinary committee meets today to deliberate on Anti-Corruption Unit chief Ravi Sawani’s report on the scam that shamed the Twenty20 league
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X