For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20ல் முதல் "200".. ஒரே இரவில் மாறிய இந்திய வீரரின் வாழ்க்கை .. 15 கோடி வரை கொடுக்க IPL ரெடி

மும்பை: ஒரேயொரு இரட்டை சதம், ஒரு இந்திய வீரரின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஆம், இன்றைய தேதிக்கு, இந்தியாவின் சென்சேஷன் கிரிக்கெட்டர் இவர் தான்.

டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் சுபோத் பாட்டி (Suboth Bhati).

2 புதிய அணிகள்.. போட்டிப்போடும் 4 2 புதிய அணிகள்.. போட்டிப்போடும் 4 "மெகா" கோடீஸ்வரர்கள்.. வியக்க வைக்கும் ஐபிஎல் "ப்ளூ பிரிண்ட்"

டெல்லியை சேர்ந்த சுபோத், கிளப் அளவிலான டி20 போட்டியில் இந்த மிரட்டலான சாதனையை தன் மகுடமாக சூடியிருக்கிறார்.

ஒரே ஆளாக ராஜாங்கம்

ஒரே ஆளாக ராஜாங்கம்

வெறும் 79 பந்துகளில் 205 ரன்களை விளாசித் தள்ளியிருக்கிறார் இந்த "காட்டடி ராஜா". இதில் 17 சிக்ஸர்களும், 17 பவுண்டரிகளும் அடங்கும். அதிரடியாக விளையாடிய சுபோத், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 256 ரன்களை குவித்தது. இதில், 205 ரன்களை ஒரே ஆளாக அடித்தது சுபோத் தான். அதாவது 80 சதவீத ரன்கள் இவருடையது தான். அடிப்படையில் இவர் ஒரு பவுலர். வலது கை வேகப்பந்து வீச்சாளர். ஆனால், பேட்டிங்கிலும் இவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. தனது ஒட்டுமொத்த பேட்டிங் வெறியையும் ஒரே போட்டியில் வைத்து தீர்த்து, தனது ஆல் ரவுண்டர் எபிலிட்டியை வெளிக்காட்டியுள்ளார்.

சாதனைகள் தகர்ப்பு

சாதனைகள் தகர்ப்பு

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 'யுனிவர்சல் பாஸ்' க்றிஸ் கெயில் கூட இரட்டை சதம் அடித்ததில்லை. அதிகபட்சமாக கெயில் 66 பந்துகளில் 175* ரன்கள் விளாசியிருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபின்ச் 76 பந்துகளில் 172 ரன்களை விளாசியுள்ளார். அடுத்த இடத்தில் மசகட்சா இருக்கிறார். இவர் 71 பந்துகளில் 162* ரன்கள் விளாசி இருக்கிறார். இப்போது இவர்கள் ஒட்டுமொத்த சாதனைகளையும் இந்திய வீரர் சுபோத் தகர்த்திருக்கிறார்.

ஐபிஎல் அணிகள் வியூகம்

ஐபிஎல் அணிகள் வியூகம்

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் சுபோத்துக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு பேட்ஸ்மேனாக அவர் இந்த சாதனையை படைத்திருந்தால் கூட, இவ்வளவு இம்பேக்ட் ஏற்பட்டிருக்காது. ஆனால், ஒரு ஆல் ரவுண்டராக, அதுவும் ஒரு ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டராக அவர் இந்த சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதால், அனைத்து ஐபிஎல் அணிகளும் சுபோத்தை தங்கள் அணியில் எடுக்க இப்போதே வியூகங்களை வகுத்து வருகின்றன.

15 கோடி வரை

15 கோடி வரை

குறிப்பாக, 2022ல் மெகா ஏலம் நடக்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே இவரை அணியில் எடுத்துவிட வேண்டும் என்பதில், சில அணிகள் பக்காவாக பிளான் செய்துவருகின்றன. ஏனெனில், இவர் ஏலத்துக்கு சென்றுவிட்டால் விலை தாறுமாறாக எகிறிவிடும். 15 கோடி வரை செல்ல கூட வாய்ப்பிருக்கிறது. எனவே, இப்போதைக்கு அவரை அணியில் எடுத்துவிட்டால், பிசிசிஐ-யின் புதிய ஐபிஎல் விதிமுறைகள் படி, அவரை அணியில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

Story first published: Monday, July 5, 2021, 21:57 [IST]
Other articles published on Jul 5, 2021
English summary
ipl teams interest in subodh bhati double century - சுபோத்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X