For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உயிர் தப்பிய சாஹல்..15வது மாடி பால்கனியில் தொங்கவிட்ட வீரர்.. மதுபோதையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

மும்பை: ஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர் சாஹலை 15வது மாடி பால்கனியின் வீரர் ஒருவர் மதுபோதையில் தொங்கவிட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஐபிஎல் 15வது சீசனில் சாஹல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 3 போட்டியில் சாஹல் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

2020 சீசனில் இருந்து ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை சாஹல் பெற்றுள்ளார்.

ஐபிஎல் 15வது சீசன் மவுசு குறைந்தது.. மொத்தமாக அடிவாங்கிய டி.ஆர்.பி.. சிஎஸ்கே, மும்பை தோல்வி காரணமா?ஐபிஎல் 15வது சீசன் மவுசு குறைந்தது.. மொத்தமாக அடிவாங்கிய டி.ஆர்.பி.. சிஎஸ்கே, மும்பை தோல்வி காரணமா?

சாஹல் வீடியோ

சாஹல் வீடியோ

ஆர்ஆர் அணியில் சாஹலும், அஸ்வினும் சேர்ந்து எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்றனர்.இந்த வகையில், அஸ்வினுடன் சேர்ந்து சாஹல் உரையாடிய வீடியோ தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாஹல் எப்போதும் துருதுரவென இருப்பவர். சக வீரரை கேலி, கிண்டல் செய்வார்.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

இந்த நிலையில், சாஹல் 2013ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து பேசிய சாஹல், நான் இந்த விசயத்தை யாரிடமும் இதுவரை சொன்னது இல்லை. இப்போது இந்த வீடியோ மூலம் உலகிற்கு தெரியட்டும். பெங்களூருவில் ஐபிஎல் லீக் போட்டிக்காக வந்து இருந்தும்.

15வது மாடி

15வது மாடி

ஆட்டம் முடிந்தவுடன் ஹோட்டலில் வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி மது அருந்தி கொண்டு இருந்தோம். அப்போது வீரர் ஒருவர் என்னையே முறைத்து கொண்டு பார்த்தார். திடீரென்று அவர் என்னை தூக்கி கொண்டு 15வது மாடி பால்கனியிலிருந்து என்னை தூக்கி கீழே வீச பார்த்தார். நான் அதிர்ச்சியில் உறைந்தேன். என்னை காப்பாற்றுங்கள் என்று கத்தினேன்.

மயங்கிவிட்டேன்

மயங்கிவிட்டேன்

அந்த வீரரின் கழுத்தை நன்காக பிடித்து கொண்டேன். அப்போது அங்கிருந்த சக வீரர்கள் என்னை காப்பாற்றினார்கள். நான் பயத்தில் மயங்கிவிட்டேன். பிறகு தண்ணீர் முகத்தில் தெளித்த பிறகு தான் நினைவு திரும்பியது. அன்று நான் 15வது மாடியிலிருந்து கீழே விழுந்திருப்பேன். இது குறித்து நானோ, இவ்லை மற்ற வீரர்களோ எந்த புகாரும் அளிக்கவில்லை. இந்த காரியத்தை செய்த வீரரின் பெயரை வெளியிட விரும்பவில்லை.

சாதி ரீதியில் இன்னல்?

சாதி ரீதியில் இன்னல்?

அன்றிலிருந்து போட்டிக்காக வெளியே செல்லும் போது பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தை கற்று கொண்டேன். இந்த சம்பவம் நிகழ்ந்து 9 ஆண்டுகள் ஆனாலும், இது குறித்து பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சாஹல் ஏற்கனவே சாதி ரீதியில் பல இன்னல்களை சந்தித்துள்ளார். ஒரு முறை கூட யுவராஜ் சிங், சாஹலை சாதியின் பெயரை வைத்து கிண்டல் செய்து வழக்கை சந்தித்தார். இதனால் சாதி ரீதியில் சாஹல் இந்த நிலையை சந்தித்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Story first published: Friday, April 8, 2022, 12:50 [IST]
Other articles published on Apr 8, 2022
English summary
IPL –Yuzvendra Chahal reveals the horrific incident as he hangs up in 15th floor சாஹலை 15வது மாடி பால்கனியில் தொங்கவிட்ட வீரர்.. மதுபோதையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X