For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் அயர்லாந்து கிரி்க்கெட் அணியில் அனுபவ வீரர்!

டெஸ்ட் போட்டி அந்தஸ்து பெற்றுள்ள அயர்லாந்து அணி, 11ம் தேதி தனது அறிமுக ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் விளையாடுகிறது. அயர்லாந்து அணியின் ஒரு வீரர் மட்டும் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

டப்ளின்: டெஸ்ட் போட்டி அந்தஸ்து பெற்றுள்ள அயர்லாந்து அணி, தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் நாளை விளையாடுகிறது. ஆனால், அயர்லாந்து அணியில் ஒரு வீரருக்கு மட்டுமே இது அறிமுகப் போட்டி இல்லை. அவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம் என, 10 நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்து கடந்தாண்டு அளிக்கப்பட்டது.

Ireland to debut in test but not this bowler

இதில் ஆப்கானிஸ்தான், ஜூன் 14ல் பெங்களூருவில் துவங்கும் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகிறது. அயர்லாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறது. அயர்லாந்தின் டப்ளின் நகரில் நாளை நடக்கும் ஆட்டத்தில் பங்கேற்பதன் மூலம், டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 11வது நாடாகிறது அயர்லாந்து.

அயர்லாந்து அணி ஒருதினப் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளில் ஏற்கனவே விளையாடி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்புக்காக அயர்லாந்து வீரர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாண்ட் ரேங்கினுக்கு மட்டும் இது அறிமுகப் போட்டி இல்லை.

அவர் ஏற்கெனவே இங்கிலாந்து அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். இதன் மூலம் ஒரு வீரர் இரண்டு நாடுகளுக்கு விளையாடியப் பெருமையை 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரேஹ்கினுக்கு கிடைக்கிறது.

அயர்லாந்து அணிக்காக ஒருதினப் போட்டிகளில் விளையாடியுள்ள, 33 வயதாகும் ரேங்கின், 2013ல் இங்கிலாந்து சென்றார். ஆஷஷ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடினார். அதில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பிறகு, 2015ல் மீண்டும் அயர்லாந்துக்கு திரும்பினார். நாளை நடக்கும் போட்டியில் களமிறங்கினால், இரண்டு நாடுகளுக்காக விளையாடிய சாதனையை அவர் புரிவார்.

அயர்லாந்து அணியில் உள்ள அட் ஜாய்ஸ், இங்கிலாந்து அணிக்காக ஒருதினப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், ரேங்கின் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவத்துடன் உள்ளார்.

1956ல் இருந்து கிரிக்கெட் வரலாற்றை எடுத்துக் கொண்டால், கெப்லர் வெசல்ஸ் மற்றும் ஜான் டிராய்கோசிஸ் ஆகியோர் மட்டுமே இரு நாடுகளுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளனர். அயர்லாந்தின் எட் ஜய்ஸ் உள்பட 10 பேர் ஒருதினப் போட்டிகளிலும், ஆறு பேர் டி--20 போட்டிகளிலும் இரு நாடுகளுக்காக விளையாடியுள்ளனர்.

கெப்லர் வெசல்ஸ் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடியுள்ளார். ஜான் டிராய்கோசிஸ் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்காக விளையாடி உள்ளார். தற்போது அந்தப் பட்டியில் அயர்லாந்தின் ரேங்கின் இணைய உள்ளார்.

Story first published: Thursday, May 10, 2018, 15:51 [IST]
Other articles published on May 10, 2018
English summary
Ireland to debut in test matches, but not for this pace bowler.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X