ஜூனியர் தோனி ரெடி.. சாக்‌ஷி தோனி குறித்து வெளியான தகவல்.. கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!

அமீரகம்: எம்.எஸ்.தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 4வது முறையாக கோப்பையை வென்றது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இதுதான் தல.. காயமடைந்த எதிரணி வீரர்.. தட்டிகொடுத்து ஆறுதல் கூறிய தோனி.. வைரல் வீடியோ! இதுதான் தல.. காயமடைந்த எதிரணி வீரர்.. தட்டிகொடுத்து ஆறுதல் கூறிய தோனி.. வைரல் வீடியோ!

சிஎஸ்கேவின் கம்பேக்

சிஎஸ்கேவின் கம்பேக்

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் முதல் அணியாக வெளியேறியது. இதனால் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தாண்டு தனது 4வது ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். குறிப்பாக தோனி இனி அவ்வளவு தான் எனக்கூறிய வாய்களுக்கு தனது அதிரடி கம்பேக் மூலம் பதிலடி கொடுத்தார்.

வைரல் போட்டோ

வைரல் போட்டோ

சென்னை அணி வெற்றி பெற்றவுடன் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினர். பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் போது தோனியை அவரது மனைவி சாக்‌ஷி தோனியும், மகள் ஜீவா தோனியும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டனர். அவர்கள் மூவரும் ஒன்றாக கட்டியணைத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது.

குட்டித் தல வருகை

குட்டித் தல வருகை

இந்நிலையில் அவர்களின் செயலுக்கு பின்னால் மற்றொரு மகிழ்ச்சிகரமான செய்தி இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது சாக்‌ஷி தோனி கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் ஜீனியர் தோனி வரவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இணையத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உண்மை நிலை

உண்மை நிலை

எனினும் இதின் உண்மை என்பது குறித்து தெரியவில்லை. ஒருவேளை சாக்‌ஷி தோனி கர்ப்பமாக இருந்திருந்தால், நேற்று சிஎஸ்கேவுக்கு மகிழ்ச்சி தருணமாக அமைந்த போதே, இந்த மகிழ்ச்சி செய்தியையும் அறிவித்திருப்பார். ஆனால் எதனையும் அவர் கூறவில்லை. எனவே குட்டி தல வரவுள்ளார் என்று பரவும் தகவல்கள் தவறானவை எனத் தெரிகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Is Sakshi Dhoni pregnent?.. CSK Fans getting emotional after know the fact
Story first published: Saturday, October 16, 2021, 15:26 [IST]
Other articles published on Oct 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X