கோலியை சிக்க நினைத்த இஷான் கிஷன்.. கவனக்குறைவால் நிகழ்ந்த தவறு.. தொடர்ந்து வீணாகும் வாய்ப்பு

இந்தூர் : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இஷான் கிஷன் தமக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்து வருவது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

வங்கதேசத்திற்கு எதிராக இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷன், அதன் பிறகு இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதன் காரணமாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கேஎல் ராகுல் திருமணம் காரணமாக நியுசிலாந்து தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

 சூர்யகுமார், இஷான் கிஷானுக்கு சரவெடி விருந்து.. நியூசி,உடனான 3வது ODI.. பிட்ச்-ல் உள்ள சர்ஃபரைஸ்! சூர்யகுமார், இஷான் கிஷானுக்கு சரவெடி விருந்து.. நியூசி,உடனான 3வது ODI.. பிட்ச்-ல் உள்ள சர்ஃபரைஸ்!

வீணாகும் வாய்ப்பு

வீணாகும் வாய்ப்பு

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து தொடரில் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டாலும், அவருக்கு நடுவரிசையில் தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இஷான் கிஷன் அணியில் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கிடைத்த வாய்ப்பை இஷான் கிஷன் வீணடித்தார் என்றே சொல்ல வேண்டும்.

நியூசி தொடர்

நியூசி தொடர்

ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அவருக்கு தனது திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. இதே போன்று 2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு குறைவான இலக்கே இருந்ததால் அவர் 8 ரன்கள் எடுத்த போது இந்தியா வென்றுவிட்டது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் தனது திறமையை நிரூபிக்க இஷான் கிஷனுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. 230 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற ஸ்கோரில் இந்தியா இருந்த போது களத்திற்கு இஷான் கிஷன் வந்த பிறகு, முதல் ரன்களை எடுக்கவே 7 பந்துகளை அவர் எடுத்து கொண்டார். நியூசிலாந்து பந்தை எதிர்கொள்ள தடுமாறிய அவர், பிறகு ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார்.

ரன் அவுட்

ரன் அவுட்

24 பந்துகளை எதிர்கொண்ட இஷான் கிஷன் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அவருக்கு நெருக்கடி அதிகமாக இஷான் கிஷன் ஃபில்டர்களிடமே பந்தை அடித்துவிட்டு ஓடினார். இதனை பார்க்காத விராட் கோலி, ஸ்ட்ரைக்கர் எண்ட்க்கு வந்துவிட, இஷான் கிஷனும் பாதியில் வந்தவிட்டு, பிறகு அவரும் அதே திசையில் ஓடினார். இதன் காரணமாக இஷான் கிஷன் ரன் அவுட்டாகி அருமையான வாய்ப்பை வீணடித்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ishan kishan caught up in poor run out and wasted another oppurtunity கோலியை சிக்க நினைத்த இஷான் கிஷன்.. கவனக்குறைவால் நிகழ்ந்த தவறு.. தொடர்ந்து வீணாகும் வாய்ப்பு
Story first published: Tuesday, January 24, 2023, 16:42 [IST]
Other articles published on Jan 24, 2023
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X