For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"எல்லாமே தப்பா நடக்குது.. ஐபிஎல் கஷ்டம்".. "திடீர்" மாற்றம் - மௌனமாக "ம்ம்" கொட்டிய கங்குலி

மும்பை: அமீரகத்தில் இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகள் நடக்கவுள்ள சூழலில், மிக இக்கட்டான சிக்கலை பிசிசிஐ சந்திக்கவிருக்கிறது.

கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 தொடரின் மீதமுள்ள 31 போட்டிகளும், வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெறுகிறது.

மெகா ஏலம்: CSK தக்க வைக்கும் மெகா ஏலம்: CSK தக்க வைக்கும் "4" வீரர்கள் - ரசிகர்கள் கொண்டாடிய "அந்த" ஹீரோவுக்கே "ஆப்பு"?

அதாவது செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர், அக்டோபர் 15 வரை நடைபெறுகிறது. ரசிகர்கள் இத்தொடரை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் இந்த சூழலில், பெரும் சிக்கலாக எழுந்துள்ளது.

போட்டி ஏற்பாடுகள்

போட்டி ஏற்பாடுகள்

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் கட்டத்தில் நடைபெறவுள்ள 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படும் என்றும், 7 போட்டிகள் single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போட்டி தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள, சில ஐபிஎல் அணிகளின் நிர்வாகிகள் ஜுலை மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகம் செல்வதாக இருந்தனர். ஆனால், இந்தியாவில் இருந்து அமீரகம் வருவதற்கான தடையை ஜுலை 21ம் தேதி வரை நீட்டித்தது அந்நாட்டு அரசு.

துபாய் எக்ஸ்போ

துபாய் எக்ஸ்போ

எனினும் கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக, நிர்வாகிகளை இன்னமும் அமீராகம் அனுப்பாமல் வைத்திருக்கிறது பிசிசிஐ. இதனால், அமீரகத்தில் ஹோட்டல் புக்கிங்கை வீடியோ கால் மூலம் முடிக்க வேண்டிய நிர்பந்தம் பிசிசிஐ க்கு ஏற்பட்டிருக்கிறது. அது கூட பரவாயில்லை இல்லை. அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் துபாய் எக்ஸ்போ காரணமாக, அமீரகத்தில் ஹோட்டல் ரூம்களின் வாடகை தாறுமாறாக உயர்ந்துள்ளது புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாம்.

பெரும் சிக்கல்

பெரும் சிக்கல்

இந்த துபாய் எக்ஸ்போ காரணமாக, வழக்கத்தை விட அதிகமாக அமீரகத்துக்கு மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால், மொத்தமாக அறைகளை புக்கிங் செய்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஹோட்டலில் வழக்கத்தை விட அதிகமாக மற்ற விருந்தினர்களும் வருவார்கள் என்பதால், வீரர்களுக்கான பயோ-பபுளை ஒழுங்காக கடைப்பிடிப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, அமீரகம் செல்வதற்கு மொத்தமாக டிக்கெட் புக் பண்ணுவதிலும் பிரச்சனை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

பெரும் சவால்

பெரும் சவால்

இதனால், வழக்கமாக புக் செய்யப்படும் ஹோட்டல்களுக்கு பதிலாக, வேறு சில புதிய ஹோட்டல்களில் ரூம் புக்க பண்ண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 சீசனை போல் அல்லாமல், 2022 சீசனை அமீரகத்தில் நடத்துவது பெரும் சவாலாக அமையப் போகிறது என்பதில் சந்தேகமில்லை என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Monday, July 5, 2021, 17:33 [IST]
Other articles published on Jul 5, 2021
English summary
issues for IPL teams in UAE due to hotel rates - ஐபிஎல் 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X