தம்பி உன் வயது என்னுடைய அனுபவம்… அடித்து விளையாடும் வாசிம் ஜாபர்

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

நாக்பூர்: எந்த சாதனைக்கும் வயது ஒரு தடையாக இருக்காது என்பது, பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், விளையாட்டில் வயது ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் அதையும் மீறி, ஒரு சிலர் சாதனைகளைப் புரிந்து வருகிறது. அந்த வரிசையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் இணைந்துள்ளார்.இரானி கோப்பை கிரிக்கெட்டில், ரஞ்சி சாம்பியன் விதர்பா அணியும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும் மோதுகின்றன.

Jaffer defy age

இந்தப் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்து வரும் விதர்பா அணி, இரண்டாம் நாள் ஆட்ட இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு, 598 ரன்கள் குவித்துள்ளது. இதில், மும்பையைச் சேர்ந்த, விதர்பா அணிக்காக விளையாடும் முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர், ஆட்டமிழக்காமல், 285 ரன்கள் குவித்துள்ளார்.

ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் அனுபவமிக்க ரவிசந்திரன் அஸ்வின், இளம் வீரர்கள் என, யார் பந்து வீசினாலும், ஜாபரை ஒன்றும் செய்ய முடியவில்லை. வாசிம் ஜாபர் இரட்டை சதம் அடித்ததுடன், அவருக்கு பந்து வீசிய அஸ்வின், ஜெயந்த் யாதவ் ஆகியோரும் சதம் அடித்தனர்.

அஸ்வின் 43 ஓவர்களில், 123 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஜெயந்த் யாதவ் 38 ஓவர்களில் 149 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். சமீபத்தில் உலகக் கோப்பையை வென்று வந்த 19 வயதுக்குட்பட்டோர் அணியின் பிரித்வி ஷா போன்ற இளம் வீரர்கள், ஜாபரின் ஆட்டத்தை பார்த்து வியந்தனர்.

வாசிம் ஜாபர், 18 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணிக்காக அறிமுகமாகமானபோது, பார்த்திவ் ஷா, மூன்று மாதக் குழந்தை. ஆனாலும், இளம் வீரர்களுக்கு இணையாக, 40 வயதிலும், தொடர்ந்து நீண்ட நேரம் மைதானத்தில் நிற்பதுடன், அதிரடி ஆட்டத்தையும் காட்டினார் வாசிம் ஜாபர்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
40 year old Jaffer scored double century in Irani cup,
Story first published: Friday, March 16, 2018, 11:35 [IST]
Other articles published on Mar 16, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற