For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிறு வயதில் தந்தையை இழந்தேன்.. மீண்டு வருவேன்.. காயமடைந்த நிலையில் வெளியான பும்ரா பேட்டி

மும்பை : தமது கிரிக்கெட் வாழ்க்கையில் எப்போதெல்லாம் சரிவை சந்திக்கிறனோ அப்போது எப்படி மீண்டு வருவேன் என்பது குறித்து பும்ரா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Recommended Video

Jasprit Bumrah-வின் Emotional பேட்டி! Struggling முதல் Setback வரை

இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. பும்ராவுக்கு முதுகில் ஏற்பட்டிருக்கிற காயம் இது முதல் முறை அல்ல.

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு அது போன்ற ஒரு காயத்தை சந்தித்திருக்கிறார். இந்த நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அவர் பேசி இருக்கிறார்.

மீண்டும் உயிர்பெற்ற சுஷாந்த் சிங் சர்ச்சை.. தோனி தான் காரணம்.. பாலிவுட்டிற்கு எதிராக குரல்.. எப்படி? மீண்டும் உயிர்பெற்ற சுஷாந்த் சிங் சர்ச்சை.. தோனி தான் காரணம்.. பாலிவுட்டிற்கு எதிராக குரல்.. எப்படி?

கோபம் வரும்

கோபம் வரும்

அதில் தாம் சிறுவயதில் அமைதியாகவே இருக்க மாட்டேன்.எனக்கு கோபம் ரொம்ப வரும் எப்போதும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வேன்.அதன் பிறகு தான் என்னால் உணர முடிந்தது. நான் என் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நான் நினைத்ததை களத்தில் செயல்பட முடியாது. கிரிக்கெட்டில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு என்னுடைய கோபங்களை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொண்டேன்.

யோசிக்க மாட்டேன்

யோசிக்க மாட்டேன்

நிதானமாக இருப்பது பலமுறை எனக்கு உதவி இருக்கிறது. நமது அனுபவத்திலிருந்து தான் கற்றுக் கொள்வோம். நான் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன். அதிலிருந்து கிடைக்கும் அனுபவத்தில் தான் பாடம் கற்று இருக்கிறேன். எனக்கு களத்தில் மோசமான நாள் அமைந்தால், இதைப் பற்றி யோசிக்க மாட்டேன். இல்லையென்றால் மனசு கண்டபடி யோசிக்கும். அதை தடுப்பதற்காக முற்றிலும் மனசை வேறோரு விஷயம் குறித்து திருப்பி விடுவேன் பிறகு கிரிக்கெட்டுக்கு வந்து எதனால் தவறு நிகழ்ந்தது என்பது குறித்து ஆராய்வேன்.

வாழ்க்கை மாறி இருக்கிறது

வாழ்க்கை மாறி இருக்கிறது

எனக்கு எங்கு தவறு நடக்கிறது என்று தெரியவில்லை என்றால் நான் நம்பிக்கை வைத்திருக்கும் நபர்களின் உதவியை நாடுவேன். அதன் பிறகு பயிற்சியாளரிடம் சென்று அறிவுரைகளை கேட்பேன் . சிறுவயதில் எனது தந்தையை நான் இழந்து விட்டேன். என் தாய் வேலைக்குச் சென்று தான் எங்களை பார்த்துக் கொண்டார்கள். வாழ்க்கையில் உயரத்தையும் பார்த்திருக்கிறேன், வீழ்ச்சியும் பார்த்திருக்கிறேன். ஒரே நாளில் எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத நிலைக்கு சென்று இருக்கிறோம். அதேபோல் வாழ்க்கையின் உச்சத்திற்கும் சென்று இருக்கிறோம்.

தாய் மீதான பாசம்

தாய் மீதான பாசம்

இதனால் நான் திமிராக நடந்து கொள்ள மாட்டேன். தாய் எனக்காக நிறைய செய்திருக்கிறான். அவருக்கு நான் திருப்பி எதுவும் செய்ய முடியாது. என் தாய் இதை தான் இசைய வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தியதில்லை. நான் சிறுவயதிலே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்ததால் அவர் என்னை டாக்டராக வேண்டும் என்றெல்லாம் நினைத்தது கிடையாது . ஆனால் என் தாய் பள்ளியின் முதல்வராக இருந்ததால் எனக்கு ஆங்கிலம் மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயமாக இருந்தார் என்று பும்ரா கூறியுள்ளார்.தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார்.

Story first published: Friday, September 30, 2022, 19:01 [IST]
Other articles published on Sep 30, 2022
English summary
Jasprit bumrah reveals about his past struggling life and how he deals setbacks சிறு வயதில் தந்தையை இழந்தேன்.. மீண்டு வருவேன்.. காயமடைந்த நிலையில் வெளியான பும்ரா பேட்டி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X