For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஏலத்தில் கவனத்தை ஈர்த்த பெண்.. ஒரே ஆளாக கலக்கிய காவ்யா மாறன்.. ஆண்களை ஒரங்கட்டிய சிங்கபெண்

கொச்சி : ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்வதில் வகுக்கும் யுக்திகள் மூலம் அணி நிர்வாகிகள் எப்போதும் ரசிகர்களிடையே பிரபலம் அடைவது உண்டு. குறிப்பாக டெல்லி அணியை சேர்ந்த காந்தி மற்ற அணி வீரர்களின் விலையை உயர்த்துவதில் வல்லவர்.

ஆனால் இம்முறை டெல்லி அணியிடம் கையிருப்பு தொகை குறைவாக இருந்ததால் அவர்கள் எந்த சேட்டையும் செய்யவில்லை.

ஆனால் ஒட்டுமொத்த ஐபிஎல் மினி ஏலத்தையும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அசத்தியிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த காவ்யா மாறன்.

சிஎஸ்கே vs காவ்யா மாறன்.. ஓப்பனிங் வீரருக்காக நடந்த பெரும் போராட்டம்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்! சிஎஸ்கே vs காவ்யா மாறன்.. ஓப்பனிங் வீரருக்காக நடந்த பெரும் போராட்டம்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

கலக்கிய பெண்கள்

கலக்கிய பெண்கள்

பொதுவாக ஐபிஎல் மினி ஏலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கவனத்தை ஈர்ப்பார்கள். குறிப்பாக மும்பை அணியில் நித்தி அம்பானி, பஞ்சாப் அணியில் ப்ரீத்தி ஜிந்தா, கொல்கத்தா அணியில் ஜான்வி ஆகியோர் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள்.ஆனால் இம்முறை ஒட்டுமொத்த ஐபிஎல் ஏலத்திலும் காவியா மாறன் என்ற ஒரே பெண்மணி மட்டும் தான் இருந்தார்.

தனி ஆள்

தனி ஆள்

எனினும் தனி சிங்கமாக நின்று ஏலத்திற்கு வந்த வீரர்களை அபாரமாக விலையை நிர்ணயித்து மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். காவியா மாறனுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் பிரைன் லாராவும் துணையாக நின்றார். ஏலம் தொடங்கியதில் இருந்து பெரிய அணிகளுடன் போட்டி போட்டு சிங்கம் எப்படி தனது இறையை குறி வைத்து எடுக்குமோ அதே போன்று தாங்கள் நினைத்த வீரர்களை குறி வைத்து ஹைதராபாத் அணியினர் வாங்கினார்கள்.

காவ்யா மாறன் செக்

காவ்யா மாறன் செக்

இதில் இங்கிலாந்து வீரர் ஹாரி புருக்கை 13 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து காவ்யா மாறன் தட்டி தூக்கினார். இதை போன்று தொடக்க வீரர் மாயங் அகர்வாலை 8 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும், தென்னாபிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசனை 5 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும் காவ்யா மாறன் எடுத்தார்.இதேபோன்று காஷ்மீரை சேர்ந்த தொடக்க வீரர் விவராந்த் ஷர்மாவை 2 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து தட்டி தூக்கினார்.

தட்டி தூக்கினார்

தட்டி தூக்கினார்

காவியா மாறன் இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளர் ஆதில் ரசித்தை அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கும், இந்திய வீரர் மாயங் தகாரை ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆக்கில் ஹூசேனுக்கு ஒரு கோடி ரூபாயும் ,மும்பையில் விளையாடிய மார்க்கண்டே என்ற சுழற் பந்துவீச்சாளருக்கு 50 லட்சம் ரூபாயும் ,உபேந்திர சிங் யாதவுக்கு 25 லட்சம் ரூபாயும், திறமையான இளம் வீரராக அறியப்பட்ட ஆல்ரவுண்டர் சன்வீர் சிங்குக்கு 20 லட்சம் ரூபாயும் விலை கொடுத்தார் காவ்யா மாறன்.

6.55 கோடி மிச்சம்

6.55 கோடி மிச்சம்

மும்பை அணியில் விளையாடிய அன்மோல்பிரித் சிங்குக்கு 20 லட்சம் ரூபாயும் , சம்ராத்துக்கு 20 லட்சம் ரூபாயும், நிதிஷ்குமாருக்கு 20 லட்சம் ரூபாயும் கொடுத்து காவியா மாறன் அள்ளினார். இதன் மூலம் அணிக்கு தேவைப்பட்ட 25 வீரர்களையும் காவ்யா மாறன் எடுத்திருக்கிறார். தற்போது அவர்கள் கையில் ஆறு கோடியே 55 லட்சம் ரூபாய் எஞ்சி இருக்கிறது.

Story first published: Friday, December 23, 2022, 23:43 [IST]
Other articles published on Dec 23, 2022
English summary
Kavya Maran a single representative from women shines in ipl mini auction 2023 ஐபிஎல் ஏலத்தில் கவனத்தை ஈர்த்த பெண்.. ஒரே ஆளாக கலக்கிய காவ்யா மாறன்.. ஆண்களை ஒரங்கட்டிய சிங்கபெண்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X