For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வலிமையான மும்பை சிட்டி... தோற்ற கேரளா பிளாஸ்டர்ஸ்.. தொடர் தோல்வியால் பின்தங்கிய அணி!

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 81வது போட்டி நேற்றைய தினம் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி மற்றும் மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதிய நிலையில், 2க்கு 1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணி வெற்றி பெற்றுள்ளது.

கோலியின் மாஸ் அஸ்திரம்.. 3 பேர் பார்முலாவை கொண்டு வர முடிவு.. சென்னையில் நடக்க போகும் தரமான சம்பவம் கோலியின் மாஸ் அஸ்திரம்.. 3 பேர் பார்முலாவை கொண்டு வர முடிவு.. சென்னையில் நடக்க போகும் தரமான சம்பவம்

முதல் பகுதியில் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்ட கேரளா பிளாஸ்டர்ஸ் அணி ஒரு கோலை அடித்த நிலையில், மும்பை சிட்டி 2 கோல்களை அடித்து போட்டியில் வெற்றிக்கு முந்தியது.

85வது போட்டி

85வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 81வது போட்டி நேற்றைய தினம் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலிடத்தில் உள்ள மும்பை சிட்டி எப்சி மற்றும் 9வது இடத்தில் உள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதிய நிலையில், 2க்கு 1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணி வெற்றி பெற்றுள்ளது.

தவறவிட்ட கேரளா பிளாஸ்டர்ஸ்

தவறவிட்ட கேரளா பிளாஸ்டர்ஸ்

முதல் பகுதியில் கோல் அடிக்க கிடைத்த அதிகமான வாய்ப்புகளை கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தொடர்ந்து தவறவிட்ட நிலையில் 27வது நிமிடத்தில் வின்சென்ட் கோமெசின் கோல் அடிக்கும் வாய்ப்பை மும்பை சிட்டியின் பிபின் சிங் தடுத்தார். இதையடுத்து அந்த அணியின் ஆடம் லீ பாண்ட்ரே 67வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.

அணியின் 3 மாற்றங்கள்

அணியின் 3 மாற்றங்கள்

நேற்றைய போட்டியில் கேரளா அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அணியில் பக்காரி கோன், பிரசாந்த் கருத்தடத்குனி, யோன்ட்ரெம்பெம் தெனேசெந்த்ரா ஆகியோர் நேற்றைய போட்டியில் அந்த அணியில் இடம்பெற்றிருந்தனர். ஆயினும் இந்த மாற்றங்கள் அந்த அணியின் வெற்றிக்கு கைக்கொடுக்கவில்லை.

மும்பை சிட்டி அதிரடி

மும்பை சிட்டி அதிரடி

இதேபோல செர்ஜியோ லோபெராவின் மும்பை சிட்டி அணியின் ஆடம் லி பான்டர், விக்னேஷ் தக்ஷிணாமூர்த்தி மற்றும் சி கோடார்ட் ஆகியோர் அந்த அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தனர். நேற்றைய ஆட்டத்தின் முதல் பகுதி விறுவிறுப்புடன் அமைந்திருந்தது. கோல் அடிக்கும் வாய்ப்புகள், மிஸ் செய்த நிகழ்வுகள், கோல் கீப்பர்களின் சிறப்பான தருணங்கள் ஆகியவை ரசிகர்களுக்கு விருந்து வைத்தன.

Story first published: Thursday, February 4, 2021, 11:37 [IST]
Other articles published on Feb 4, 2021
English summary
The first half was an exciting affair filled with plenty of actions from both teams
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X