மோசமான வார்த்தையில் திட்டிய ராணா.. பேட் பரிசளித்த கோஹ்லி.. நம்ம கேப்டன் மனசு இருக்கே!

Posted By:
நேற்றைய போட்டியில் கொல்கத்தா வீரரின் மோசமான செயல்- வீடியோ

கொல்கத்தா: தன்னை களத்தில் திட்டிய கொல்கத்தா வீரர் நிதீஷ் ராணாவிற்கு கோஹ்லி கிரிக்கெட் பேட் கொடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அதிரடியாக வெற்றி பெற்றது. இதில் கொல்கத்தா வீரர் நிதீஷ் ராணா மிகவும் சிறப்பாக விளையாடினார்.

ஒரே ஓவர் வீசி அவர் இரண்டு விக்கெட் எடுத்தார். அதே போல் பேட்டிங்கில் அவர் 25 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரி அடக்கம்.

யார் ராணா

யார் ராணா

தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் நிதீஷ் ராணா, டெல்லியை சேர்ந்தவர். பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் இவர் கோஹ்லி விக்கெட்டை வீழ்த்தினார். அவர் கோஹ்லி விக்கெட்டை எடுத்த போது, கோபத்தின் உச்சத்திற்கு சென்றார். கோஹ்லியை பார்த்து மோசமான வார்த்தைகளில் கத்தினார். எப்போதும் கோபமாக செயல்படும் கோஹ்லியே அதைப்பார்த்து அமைதியாக சென்றார்.

வியப்பு

வியப்பு

அடுத்ததாக கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய வந்த போது, பெங்களூர் வீரர் குல்வந்த் ஓவரில் நிதிஷ் ராணா சிக்ஸ் ஒன்று அடித்தார். இந்த சிக்ஸ் மைதானத்தில் கடைசி இடத்தில் இருந்த ரசிகர்களிடம் சென்று விழுந்தது. இதை பார்த்து கோஹ்லி ஆச்சர்யப்பட்டு கைதட்டினார். அவரது பேட்டிங் கோஹ்லியை அதிகம் கவர்ந்துள்ளது.

பரிசு

பரிசு

இந்த நிலையில் அவரது பேட்டிங் திறனை பார்த்து கோஹ்லி அவருக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கி இருக்கிறார். அவரை நேரில் சந்தித்து இந்த பரிசை வழங்கியுள்ளார். இதனால் கோஹ்லிக்கு அவர் மீது எந்த விதமான கோபமும் இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இதை பலரும் பாராட்டி உள்ளனர்.

ராணா நன்றி

ராணா தற்போது இதற்கு நன்றி தெரிவித்துள்ளார். ராணா தனது பேட்டியில் கோஹ்லி அண்ணனுக்கு நன்றி, எனக்கு இது பெரிய ஊக்கமளித்துள்ளது. நான் அவரிடம் கோபப்பட்டதை பற்றி அவர் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. அவர் எனக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார் என்றுள்ளார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Kohli gifted bat to Nitesh Rana, who is now a Kolkata hero cricketer.
Story first published: Wednesday, April 11, 2018, 15:59 [IST]
Other articles published on Apr 11, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற