For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இரவு முழுக்க பயிற்சி.. கோலியை குழப்பத்திற்கு உள்ளாக்கிய அந்த சம்பவம்.. 24 மணி நேரம்தான் இருக்கு!

சென்னை: பிங்க் பால் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் இரவு முழுக்க இரண்டு நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான பிங்க் பால் போட்டி நாளை நடக்கிறது. நாளை பிற்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி நடக்க உள்ளது.

இந்த 7 பேர்தான் கேம் சேஞ்சர்ஸ்.. கோலி எடுத்த முடிவால் அதிர்ந்து போன பிசிசிஐ.. இப்படி பார்த்ததே இல்லைஇந்த 7 பேர்தான் கேம் சேஞ்சர்ஸ்.. கோலி எடுத்த முடிவால் அதிர்ந்து போன பிசிசிஐ.. இப்படி பார்த்ததே இல்லை

இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

பிங்க்

பிங்க்

இந்த நிலையில் பிங்க் பால் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் இரவு முழுக்க இரண்டு நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இது இரவு பகல் ஆட்டம் என்பதால் லைட் வெளிச்சத்தில் பிங்க் பாலில் ஆட பயிற்சி எடுத்து வருகிறார்கள். அதோடு பனி காரணமாக பந்து ஈரமாகிவிடும்.

பவுலிங்

பவுலிங்

இதில் பவுலிங் செய்வது கடினம். பந்து ஈரமான பின் அதை பிடித்து ஸ்விங் செய்வது கடினம். ஸ்பின் பவுலர்கள் இந்த பந்து காரணமாக அதிகம் கஷ்டப்படுவார்கள். இந்த நிலையில் இரண்டாவது டெஸ்டில் நன்றாக பந்து வீசிய அக்சர் பட்டேல் இந்த பிங்க் பந்தில் பயிற்சியின் போது திணறியதாக கூறப்படுகிறது.

ஸ்விங்

ஸ்விங்

பந்தை சரியாக ஸ்விங் செய்ய முடியாமல் இவர் திணறி இருக்கிறார். சிவப்பு பந்து போல இவரால் பிங்க் பந்தில் வேகமாக வீச முடியவில்லை. வேகமாக வீசுவதுதான் இவரின் இயல்பு.

கஷ்டம்

கஷ்டம்

ஆனால் அதை பிங்க் பந்து செய்ய முடியவில்லை. ஆனால் இன்னொரு பக்கம் வாஷிங்க்டன் சுந்தர் பிங்க் பந்தில் நன்றாக வீசி இருக்கிறார். இவர் கூடுதலாக பவுன்ஸ் செய்ய கூடிய ஸ்பின் பவுலர்.

சுந்தர் எப்படி வீசினார்

சுந்தர் எப்படி வீசினார்

பயிற்சியின் போது சுந்தர் சரியாக கூடுதல் ஸ்பின் மற்றும் வேகத்தில் வீசி உள்ளார். இதனால் இவர்கள் இருவரில் இந்திய அணியில் யார் ஆடுவார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. கேப்டன் கோலி இன்னும் முழுமையாக பிளேயிங் லெவனை முடிவு செய்யவில்லை என்கிறார்கள்.

Story first published: Tuesday, February 23, 2021, 16:02 [IST]
Other articles published on Feb 23, 2021
English summary
Kohli has to choose either Washington or Axar to play with Pink Ball against England in the third test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X