For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பைக்கு பின்னாடி வாழ்க்கை ரொம்ப கொடுமைங்க..! ஏண்டா விடியுதுன்னு தோணும்..! புலம்பும் கேப்டன்

லாடர்ஹில்: உலக கோப்பைக்கு பிறகு, விடியும் ஒவ்வொரு காலையும் மோசமாகவே இருந்தது என்று கேப்டன் விராட் கோலி கூறியிருக்கிறார்.

உலக கோப்பை லீக் ஆட்டங்களில் கலக்கிய இந்திய அணி, அரையிறுதியில் அதோ கதியானது. நியூசிலாந்திடம் ஒட்டுமொத்தமாக சரண்டராகி தோல்வியுடன் ஊர் திரும்பியது. அந்த ஏமாற்றம் ஒரு மாதத்தை எட்டி இருக்கும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தமது கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்திருக்கிறது.

3 டி 20, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்திய அணியின் இந்த தொடர் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது குறித்து கோலி கூறியதாவது:

சிறந்த வாய்ப்பு

சிறந்த வாய்ப்பு

இந்த தொடர் ரிஷப் பன்ட் போன்று அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு அருமையான வாய்ப்பாகும். அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பன்ட் தமது திறமைகளையும் வெளிப்படுத்த சரியான வாய்ப்பு.

தோனி அனுபவம்

தோனி அனுபவம்

அவரது திறமை பற்றி எங்களுக்கு தெரியும். தோனியின் அனுபவம் ஒரு முக்கிய காரணம் என்றாலும், இளம் வீரர்கள் அடுத்த கட்டத்துக்கு செல்ல இது ஒரு வாய்ப்பாக அமையும்.

நினைக்க முடியாது

நினைக்க முடியாது

ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே போன்ற வளரும் வீரர்கள் வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். உலக கோப்பை தோல்வி நினைத்து பார்க்க முடியாது ஒன்று. அந்த தோல்விக்குப்பின் ஒவ்வொரு நாளும் விடியும்போது மிக மோசமானதாக இருந்தது.

மீண்டு வருவது தான்

மீண்டு வருவது தான்

உலக கோப்பையில் இருந்து மீண்டு தற்போது சிறப்பாக இருக்கிறோம். கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருக்கிறோம். இப்போதைக்கு நாங்கள் செய்ய வேண்டியது தோல்வியில் இருந்து மீள்வது தான் என்றார்.

Story first published: Saturday, August 3, 2019, 18:26 [IST]
Other articles published on Aug 3, 2019
English summary
Kohli says we are looking to rebuild again in West Indies series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X