For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கவர்ன்மென்ட் வேலை வேணாம்.. லெட்டரை கிழித்து எறிந்த வீரர்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. உண்மை சம்பவம்!

மும்பை: இந்திய அணியில் சகோதரர்களான க்ருனால் பண்டியா, ஹர்திக் பண்டியா இடம் பெற்று வருகின்றனர்.

Recommended Video

Joginder Sharma talks about his duty and family

அவர்களில் க்ருனால் பண்டியா வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை பற்றி அவர் கூறி உள்ளார்.

அரசு வேலைக்கு வந்த கடிதத்தை தான் கிழித்து எறிந்து விட்டு வீரர்களை தேர்வு செய்ய நடந்த சோதனை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற சம்பவம் பற்றி கூறி உள்ளார். அந்த போட்டிக்கு பின் தான் பண்டியா சகோதரர்களின் கிரிக்கெட் வாழ்வு மாறியது.

வாழ்க்கையே முடங்கிப்போய் கிடக்கு... விளையாட்டப்பத்தி என்னத்த சொல்றது வாழ்க்கையே முடங்கிப்போய் கிடக்கு... விளையாட்டப்பத்தி என்னத்த சொல்றது

ஆல் - ரவுண்டர் குறை

ஆல் - ரவுண்டர் குறை

இந்திய அணியில் அதிக ஆல் - ரவுண்டர் இல்லை என்ற குறை எப்போதுமே இருந்து வந்தது. அதிலும் இந்திய அணியில் ஜாம்பவான் கபில் தேவ்வுக்கு பின் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் அமையவில்லை. இது அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்து வந்தது.

இருவரும் தேர்வு

இருவரும் தேர்வு

அப்போது அணியில் தேர்வு செய்யப்பட்டார் ஹர்திக் பண்டியா. தொடர்ந்து அவர் சகோதரர் க்ருனால் பண்டியா சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக இந்திய டி20 அணியில் இடம் பெற்றார். இவர்கள் இருவரும் இந்திய அணியில் இடம் பெரும் முன்பே மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி வந்தனர்

க்ருனால் பண்டியா நிலை

க்ருனால் பண்டியா நிலை

ஹர்திக் பண்டியா பல போட்டிகளில் ஆடி பெரும் புகழோடு இருக்கிறார். அவரது அதிரடி ஆட்டம் பற்றி அறியாதவர்களே இல்லை எனலாம். ஆனால், அவரது மூத்த சகோதரர் க்ருனால் பண்டியா அத்தனை எளிதாக அணிக்குள் நுழையவில்லை.

மாநில அணியில் இடம்

மாநில அணியில் இடம்

இந்திய அணியைப் போலவே உள்ளூர் அணியிலும் அவரது இளைய சகோதரர் ஹர்திக் பண்டியா மாநில அணியான பரோடா அணியில் முதலில் இடம் பெற்றுள்ளார். அதன் பின்னரே க்ருனால் பண்டியா பரோடா அணியில் இடம் பெற்றுள்ளார்.

அந்த சம்பவம்

அந்த சம்பவம்

மேலும், அதற்கான சோதனைப் போட்டியில் தான் எப்படி பங்கேற்றேன் என்பது பற்றியும், அதன் பின் தன் வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறியது என்பது பற்றியும் கூறி உள்ளார் க்ருனால் பண்டியா. குறிப்பாக, அரசு வேலைக்கு வந்த கடிதத்தை கிழித்து எறிந்துள்ளார்.

ஸ்பீட் போஸ்ட் வேலை

ஸ்பீட் போஸ்ட் வேலை

"அப்போது அரசு வேலையான ஸ்பீட் போஸ்ட் பிரிவில் வேலைக்கு எடுத்தார்கள். எனக்கு நேர்முகத் தேர்வுக்கு கடிதம் வந்தது. என் தந்தை, இது நல்ல வாய்ப்பு, மாதம் 15 முதல் 20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். அதனால் நீ இதற்கு சென்று முயற்சி செய்ய வேண்டும் என்றார்." எனக் கூறினார் க்ருனால் பண்டியா.

சோதனைப் போட்டிகள்

சோதனைப் போட்டிகள்

"அதே சமயம் எனக்கு பரோடா அணிக்காக சையது முஷ்டாக் அலி ட்ராபி தொடரில் ஆட நடக்க இருந்த சோதனைப் போட்டிகள் இருந்தன. அப்போது நான் அதில் பங்கேற்க நினைத்தேன். அதற்கு முந்தைய 2 - 3 ஆண்டுகளில் கடுமையாக உழைத்து புதிய வீரராக மாறி இருந்தேன்" என்றார் க்ருனால்.

கடிதத்தை கிழித்து எறிந்தேன்

கடிதத்தை கிழித்து எறிந்தேன்

"அதனால், நான் ஸ்பீட் போஸ்ட் வேலைக்கு கடுமையாக உழைக்காதது பற்றி எண்ணிப் பார்த்தேன். நான் கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்றுதான் உழைத்தேன். எனவே, அந்த கடிதத்தை கிழித்து தூக்கி எறிந்துவிட்டேன். அடுத்து சோதனைப் போட்டிக்கு சென்றேன்." என்றார்.

பரோடா அணிக்கு தேர்வு

பரோடா அணிக்கு தேர்வு

"சோதனைப் போட்டியில் சிறப்பாக ஆடி பரோடா அணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஹர்திக் பண்டியா அந்த அணியில் ஏற்கனவே இடம் பெற்று இருந்தார். பின் சையது முஷ்டாக் போட்டிகள் மும்பையில் நடந்தன." என்ற க்ருனால் பண்டியா அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டது பற்றி கூறினார்.

பயிற்சியாளர் ஜான் ரைட்

பயிற்சியாளர் ஜான் ரைட்

"அப்போது (சையது முஷ்டாக் போட்டிகளில்) மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் நல்ல திறமைசாலிகளான, பேட்டிங், பவுலிங் செய்யக் கூடிய சகோதரர்கள் என எங்களை அடையாளம் கண்டார். அப்போது முதல் அவர் எங்களை பின்பற்றினார். எங்கள் வாழ்க்கை மாறியது" என்றார் ஹர்திக் பண்டியா.

தன்னார்வலர்கள்

தன்னார்வலர்கள்

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் விருப்பமுள்ளவர்கள் தன்னார்வலராக வந்து சேவை செய்யலாம் என்று கேரள அரசு அறிவித்திருந்தது. நிகிலா விமல் இதில் சேர விருப்பம் தெரிவித்திருந்தார். இதையடுத்து கண்ணூரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து கால்சென்டரில் இணைந்துள்ளார். மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை ஒருங்கிணைக்கும் கால்சென்டர் இது. இதையடுத்து ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Story first published: Sunday, April 12, 2020, 16:10 [IST]
Other articles published on Apr 12, 2020
English summary
Krunal Pandya tore down government job letter which changed his life in favour of a cricket player.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X