For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குல்தீப் 6 விக்கெட்.... ரோஹித் சதம்.... கோஹ்லி 75.... இங்கிலாந்தை வெளுத்து வாங்கியது இந்தியா!

Recommended Video

இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா- வீடியோ

நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் குல்தீப் யாதவ் 6 விக்கெட்கள் வீழ்த்த, ரோஹித் சர்மா அபார சதம் மற்றும் கேப்டன் கோஹ்லி 75 ரன்கள் எடுக்க இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 டி-20 போட்டித் தொடரில் 2-1 என வென்றது. அதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டி துவங்கியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையே நாட்டிங்காமில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸை வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பவுலிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோஸ் பட்லர் 53, பென் ஸ்டோக்ஸ் 50, ஜாசன் ராய், ஜானி பிரிஸ்டோ தலா 38 ரன்கள் எடுத்தனர்.

சுருட்டினார் குல்தீப்

சுருட்டினார் குல்தீப்

டி-20 போட்டியில் கலக்கியதைப் போலவே, குல்தீப் யாதவ் இந்தப் போட்டியிலும் அபாரமாக பந்து வீசினார். 10 ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்களை அவர் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 2, யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தவான் 40 ரன்கள்

தவான் 40 ரன்கள்

269 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ஷிகார் தவன் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 59ஆக இருந்தபோது தவான் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார்.

கோஹ்லி 75 ரன்கள்

கோஹ்லி 75 ரன்கள்

அடுத்து ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் விராட் கோஹ்லி. இருவரும் இணைந்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். 82 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்த நிலையில் கோஹ்லி ஆட்டமிழந்தார்.

ரோஹித் தூள் கிளப்பினார்

ரோஹித் தூள் கிளப்பினார்

மறுபுறம் அபாரமாக விளையாடிய ரோஹித் சர்மா ஒருதினப் போட்டிகளில் 18வது சதத்தை அடித்தார். இறுதியில் 59 பந்துகள் மீதமிருக்கையில் 40.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. ரோஹித் சர்மா 114 பந்துகளில் 15 பவுண்டரிகள், 4 சிக்சர் உள்பட 137 ரன்களுடனும், கே.எல். ராகுல் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 போட்டித் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

Story first published: Friday, July 13, 2018, 9:36 [IST]
Other articles published on Jul 13, 2018
English summary
Spinner Kuldeep Yadav's early strike Rattled England top order in the first ODI in Trentbridge today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X