ஆஷிஷ் நெஹ்ராவுக்கு லாஸ்ட், ஷேவாக்குக்கு ஃபர்ஸ்ட்!

Posted By: Staff

டெல்லி: நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற உள்ள முதல் டி-20 போட்டியில் இந்தியா தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என்பதைவிட, இந்தியாவுக்காக ஆஷிஷ் நெஹ்ரா விளையாடும் கடைசி போட்டியாகவும் முன்னாள் அதிரடி நாயகன் வீரேந்திர சேவாகுக்கு மற்றொரு வகையில் முதல் போட்டியாகவும் அமைந்துள்ளது.

நியூசிலாந்து அணி, 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட வந்துள்ளது. ஒருதினப் போட்டித் தொடரை இந்தியா 2-0 என்று வென்றுள்ளது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி-20 போட்டி டெல்லி பெராஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்க உள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் வென்றதில்லை என்ற மோசமான சாதனைக்கு, டெல்லியைச் சேர்ந்த கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான அணி முற்றுப்புள்ளி வைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

நெஹ்ராவுக்கு கடைசி போட்டி

நெஹ்ராவுக்கு கடைசி போட்டி

தற்போது, 38 வயதாகும் ஆஷிஷ் நெஹ்ரா, தனது சொந்த மண்ணான டெல்லியில் நடக்கும் ஆட்டத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்திருந்தார்.

இனறோடு கடைசி

இனறோடு கடைசி

அதன்படி, இன்று நடக்கும் ஒரு போட்டிக்கான அணியில் மட்டும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று விளையாடும் 11 பேரில் அவர் இடம்பெற்றால், இதுதான் அவருடைய சர்வதேச அளவிலான கடைசி போட்டியாக இருக்கும். இதுவரை 25 டி-20 போட்டிகளில் 34 விக்கெட்களை அவர் வீழத்தியுள்ளார்.

சேவாகுக்கு கவுரவம்

சேவாகுக்கு கவுரவம்

இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த முன்னாள் அதிரடி நாயகன் வீரேந்திர சேவாக்குக்கு இது முதல் போட்டியாக அமையும். பெரேஷா கோட்லா மைதானத்தின் ஒரு கேட்டுக்கு, சேவாக்கின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நடக்கும் முதல் போட்டி இதுவாகும்.

19 வயது மலரும் நினைவுகள்

19 வயது மலரும் நினைவுகள்

இதில் மற்றொரு சிறப்பம்சம், நெஹ்ராவும், சேவாக்கும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் டெல்லிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக கோஹ்லி விளையாடியுள்ளார்.

Story first published: Wednesday, November 1, 2017, 10:49 [IST]
Other articles published on Nov 1, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற