இனியும் எங்களால பொறுக்க முடியாது.. உடனே ஆரம்பிங்க.. மித்தாலியின் போல்டு பேச்சு!

டெல்லி: மகளிருக்கான ஐபிஎல் போட்டிகளை உடனடியாக ஆரம்பித்தாக வேண்டிய நிலை வந்து விட்டதாக இந்திய ஒரு நாள் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Mithali Raj Feels BCCI Should Start Women’s IPL

இதுவரை காத்திருந்த காலம் முடிந்து விட்டது. மகளிர் ஐபிஎல் போட்டிகளை ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று அவர் கூறியுள்ளார். பிசிசிஐ இதுகுறித்து விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்பதும் மித்தாலியின் கோரிக்கையாகும்.

2021ம் ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகளைத் தொடங்கலாம் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் மித்தாலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆடவர் ஐபிஎல் போட்டிகளைப் போல இல்லாமல், சிறிய அளவில் மகளிர் ஐபிஎல் போட்டிகளை ஆரம்பிக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

சிறிய அளவில் தொடங்கலாம்

சிறிய அளவில் தொடங்கலாம்

இணையதளம் ஒன்றுக்கு மித்தாலி ராஜ் அளித்துள்ள பேட்டியில், அடுத்த ஆண்டு மகளிர் ஐபிஎல் போட்டிகளைத் தொடங்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இதை கோரிக்கையாகவே வைக்கிறேன். சிறிய அளவிலாவது தொடங்கலாம். பெரிய அளவில் இப்போதைக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டு வீராங்கனைகள்

வெளிநாட்டு வீராங்கனைகள்

ஆடவர் போட்டிகளில் அணிக்கு 4 வெளி நாட்டு வீரர்களே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் மகளிர் அணிகளில் 5 முதல் 6 வீராங்கனைகளை சேர்க்கலாம். விதிகளை இதுதொடர்பாக வகுக்க வேண்டும். தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று மித்தாலி ராஜ் கூறியுள்ளார். கடந்த 2 வருடமாகவே மகளிர் ஐபிஎல் கண்காட்சிப் போட்டிகளை பிசிசிஐ நடத்தி வருகிறது. ஆனால் இதை முழு அளவிலான தொடராக மாற்றாமல் உள்ளது. இந்த வருடம் மகளிர் டி 20 சேலஞ்ச் தொடரில் 7 போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டித் தொடரின்போது இவையும் நடத்தப்படும்.

ஐபிஎல் போட்டிகள் நடக்கும்போது

ஐபிஎல் போட்டிகள் நடக்கும்போது

தற்போது கொரோனாவைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் தொடர் நடப்பது தள்ளிப் போயுள்ளது. இதேபோல மகளிர் போட்டிகளும் தள்ளிப் போயுள்ளன. எனவே இதுதொடர்பாக வீராங்கனைகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனிடையே, மித்தாலி மேலும் கூறுகையில், இந்திய மகளிர் கிரிக்கெட்டில் டெப்த்தான வீராங்கனைகள் இல்லை என்பது உண்மைதான். இருப்பினும் இப்போது உள்ளவர்களை வைத்து அணிகளை உருவாக்கி, அதிக அளவிலான வெளிநாட்டு வீராங்கனைகளை சேர்த்து ஐபிஎல்லை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

காத்திருப்பு போதும்

காத்திருப்பு போதும்

இதற்கு மேலும் நாம் காத்திருக்கத் தேவையில்லை. உடனடியாக இதைத் தொடங்க வேண்டும். படிப்படியாக மேம்பாடுகளை ஏற்படுத்தலாம். தொடர்ந்து போட்டிகள் நடைபெறும் போது தானாகவே தரமும் உயரும். வெளிநாட்டு வீராங்கனைகள் வரும்போது நாமும் கற்றுக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும். நமது வீராங்கனைகளுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும் என்றார் மித்தாலி. மித்தாலி சொல்லி விட்டார்.. என்ன செய்யப் போகிறார் கங்குலி. பார்க்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian Women's ODI Captain Mithali Raj demanded to launch Women's IPL tournament soon
Story first published: Thursday, March 26, 2020, 18:08 [IST]
Other articles published on Mar 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X