முதுகில் குத்திய கம்பீர்.. .. அவமானப்படுத்திய லக்னோ அணி.. மணிஷ் பாண்டே புகார்.. என்ன நடந்தது?

பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணியில் பெரிய உச்சத்தை தொடுவார் என எதிர்பார்க்கப்பட்ட வீரர் மணிஷ் பாண்டே, திறமையிலும் உடல் தகுதியிலும் முதன்மையாக வீரராக மணிஷ் பாண்டே விளங்கினார்.

ஆனால் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. கிரிக்கெட் போன்ற ஆட்டத்தில் திறமை எவ்வளவு முக்கியமோ அதை போல் அதிர்ஷ்டமும் முக்கியம்.

விராட் கோலியுடன் 2008 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் மணிஷ் பாண்டேவும் விளையாடினார்.

இந்திய அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. வங்கதேச சுற்றுப்பயணத்தில் முக்கிய மாற்றம்.. என்ன காரணம்? இந்திய அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. வங்கதேச சுற்றுப்பயணத்தில் முக்கிய மாற்றம்.. என்ன காரணம்?

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

ஆனால் கோலி உலகின் முன்னணி வீரராக விளங்கினார்.ஆனால் மணிஷ் பாண்டே பெரிய உச்சத்தை தொட முடியவில்லை. ஐபிஎல் தொடரில் முதல் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர் மணிஷ் பாண்டே.ஆனால் கோலியின் திறமையை கண்டறிந்த தேர்வுக்குழுவினர், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கியது. அந்த அதிர்ஷ்டம் மணிஷ் பாண்டேக்கு கிடைக்கவில்லை.

6 போட்டியில் வாய்ப்பு

6 போட்டியில் வாய்ப்பு

கடந்த சீசனில் லக்னோ அணிக்காக விளையாடினார்.4 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து மனிஷ் பாண்டேவை லக்னோ அணி எடுத்தது. எனினும் அவர் ஆறு போட்டிகளில் மட்டும் விளையாடி 88 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கம்பீரின் அறிவுறுத்தலின் படியே லக்னோ அணி மனிஷ் பாண்டேவை எடுத்தது. ஆனால் தற்போது அவரை விடுவித்துள்ளது.

யாரும் சொல்லவில்லை

யாரும் சொல்லவில்லை

இது குறித்து பேசிய மணிஷ் பாண்டே, தான் விடுவிக்கப்பட்டது குறித்து அணி நிர்வாகம் என்னிடம் தெரிவிக்கவே இல்லை. எனக்கு ஒரு தொலைபேசியில் கூட சொல்லவில்லை. நானே டிவியில் விடுவிக்கப்பட்டோர் பட்டியலை பார்த்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். இது போல் நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள் என்று யாராவது சொல்லி இருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை.

காரணம் தெரியவில்லை

காரணம் தெரியவில்லை

ஒரு வீரராக இதையெல்லாம் நாம் எதிர்பார்த்து தயாராக தான் இருக்க வேண்டும். காரணம் நான் நிறைய போட்டியில் விளையாடவில்லை. லக்னோ அணியின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் அவர்கள் எடுத்த முடிவு என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என்னை விடுவித்து கூடுதல் பணத்தை அவர்கள் ஏலத்தில் செலவிடலாம் என்று நினைத்திருப்பார்கள். இல்லை வேறு ஏதாவது காரணமா என்று எனக்கு தெரியவில்லை.

மணிஷ் பாண்டே ஸ்டைல்

மணிஷ் பாண்டே ஸ்டைல்

பொதுவாக என்னுடைய ஆட்டம் என்பது முதலில் களத்தில் சில நேரத்தை செலவிட்டு பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பது தான். ஆனால் சில நேரங்களில் உங்களால் பேட்டிங்கில் பெரிய ரன்களை குவிக்க முடியாது. ஆனால் இதுதான் என்னுடைய இயல்பான ஆட்டம். என்னுடைய ஸ்ட்ரைக் ரைட்டை உயர்த்த நான் பயிற்சி செய்து வருகிறேன் இது தான் என்னுடைய திட்டம்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Manish pandey feels no one in the lucknow team informed about his release from the squad முதுகில் குத்திய கம்பீர்.. .. அவமானப்படுத்திய லக்னோ அணி.. மணிஷ் பாண்டே புகார்.. என்ன நடந்தது?
Story first published: Thursday, November 24, 2022, 20:32 [IST]
Other articles published on Nov 24, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X