பாம் போட்டா கூட பிடிக்கலாம்.. பாம்பு போட்டா எப்படி பாஸ் பிடிக்கிறது.. கலகலத்த ஐபிஎல் மீம்ஸ்

Posted By:

சென்னை: சென்னை மைதானத்தில் முதல்முறையாக இவ்வளவு பாதுகாப்போடு கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இதை வைத்து நிறைய மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. சென்னை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடக்கிறது. சென்னை அணி சரியாக இரண்டு வருடங்களுக்கு பின் சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்த போட்டிக்கு எதிராக காவிரிக்காக போராடி வரும் மக்கள் இந்த போட்டிக்கு குரல் கொடுத்துள்ளனர். இணையத்திலும் நெட்டிசன்கள் கலாய்த்து இருக்கிறார்கள்.

புதிய ஐடியா

புதிய ஐடியா

இவர் ''எப்படியும் சிக்ஸர் அடிப்பாங்க. அப்ப பந்து ஆடியன்ஸ் பக்கம் வரும். பந்தை எடுத்து வச்சுட்டு கொடுக்க வேண்டாம்'' என்று புதிய ஐடியா கொடுத்துள்ளார்.

கருப்பு உடை

கருப்பு உடை

சென்னை போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட கமேண்டோ படை நியமிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு செல்லும் ரசிகர்கள் கருப்பு நிற உடை அணிய கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால், கமேண்டோ படை வீரர்கள் கருப்பு உடை அணிந்து இருப்பார்களே என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளார்.

பாம்பு மீம்

பாம்பு மீம்

ஐபிஎல் போட்டியின் போது மைதானத்தில் பாம்பு வீசப்படும் என்று வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை வைத்து இவர் மீம் போட்டுள்ளார்.

எல்லாம் போச்சு

எல்லாம் போச்சு

உள்ளே செல்ல நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இவர் சிவாஜி படத்தில் ரஜினி எல்லாவற்றையும் துறப்பது போல நாமும் செல்ல வேண்டும் என்றுள்ளார்.

பாம் பாதுகாப்பு

இவர் அதே பாம்பு விஷயத்திற்கு '' மைதானத்திற்குள் பாம் ஸ்குவாட்தானே வச்சிருப்பிங்க, பாம்பு ஸ்குவாட்க்கு என்ன செய்வீங்க?'' என்று கிண்டலாக கேட்டுள்ளார்.

எளிதாக சீட் பிடிக்கலாம்

இவர் பாம்பை உள்ளே தூக்கி வீசி எளிதாக சீட் பிடிக்கலாம் என்று ஐடியா கொடுத்துள்ளார்.

காலி இருக்கை

இந்த போட்டியில் மைதானம் காலியாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னை அணி உள்ளே வரும் போது இருக்கைகள் காலியாக இருக்கும் என்று இவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
A lot and lots of Memes have become viral about IPL match in Chennai Chepauk during Cauvery problem.
Story first published: Tuesday, April 10, 2018, 15:53 [IST]
Other articles published on Apr 10, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற