டெல்லி கேபிடல்சுக்கு எதிரான போட்டி... அணியில மாற்றத்துடன் போட்டியை எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ்!

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 13வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இதோடு 3வது டைம்.. நம்பிக்கையை உடைத்துவிட்டார்.. கடுப்பாக்கிய மூத்த வீரர்.. தலையில் கை வைத்த ரோஹித்!

இரு அணியிலும் இன்றைய போட்டியையொட்டி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

13வது போட்டி

13வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 13வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மும்பை அணி பேட்டிங்

மும்பை அணி பேட்டிங்

இன்றைய போட்டியில் இரண்டாவதாக ஆடும் அணிக்கு எதிராக பனிபொழிவு செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதையொட்டி மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணி சென்னையில் இன்றைய தனது முதல் போட்டியை இந்த சீசனில் விளையாடவுள்ளது.

தவான் கவலை

தவான் கவலை

இதையொட்டி முன்னதாக டெல்லி அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் மும்பை அணி சென்னையில் இதுவரை 3 போட்டிகளை விளையாடியுள்ள நிலையில், டெல்லி அணி சென்னை பிட்ச்சிற்கு தன்னை உடனடியாக மாற்றிக் கொள்வது சிரமம் என்றும் அதனால் இன்றைய போட்டி அந்த அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஜெயந்த் யாதவ் இணைப்பு

ஜெயந்த் யாதவ் இணைப்பு

இந்நிலையில் இரு அணியிலும் இன்றைய போட்டியையொட்டி வீரர்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய போட்டியில் 3 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே அணியில் அந்த அணி வைத்துள்ளது. அணியின் ஆடம் மில்னே இன்றைய போட்டியில் நீக்கப்பட்டுள்ளார். மாறாக ஜெயந்த் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மிஸ்ரா, ஹெட்மயர் இணைப்பு

மிஸ்ரா, ஹெட்மயர் இணைப்பு

இதேபோல டெல்லி கேபிடல்ஸ் அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அணியில் அமித் மிஸ்ரா மற்றும் சிம்ரோன் ஹெட்மயர் சேர்க்கப்பட்டுள்ளனர். மாறாக கிறிஸ் வோக்ஸ் மற்றும் லக்மன் மேரிவாலா இன்றைய போட்டியில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mumbai Indians made one change, bringing in spinner Jayant Yadav in place of pacer Adam Milne
Story first published: Tuesday, April 20, 2021, 20:33 [IST]
Other articles published on Apr 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X