For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகிலேயே சிறந்த “வழுக்கைத் தலை” அணி.. அந்த இந்திய வீரருக்கு இடம் இல்லையா? கடுப்பான ரசிகர்கள்!

லண்டன் : முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன், திடீரென உலகிலேயே சிறந்த வழுக்கைத் தலை டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார்.

அந்த அணியில் ஒரு இந்திய வீரருக்கு கூட இடம் கொடுக்கவில்லை என சிலருக்கு இதில் வருத்தம் வேறு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியை சேர்ந்த ஒரு பிரபல வீரரை இந்த வழுக்கைத் தலை அணியில் சேர்க்கவில்லை என சிலர் புகார் கூறி இருப்பது தான் இதில் உச்சகட்டம்.

ஆகஸ்டில் இலங்கை பயணம்... ஒருநாள், டி20 தொடர்களில் மோதும் இந்திய அணிஆகஸ்டில் இலங்கை பயணம்... ஒருநாள், டி20 தொடர்களில் மோதும் இந்திய அணி

விசித்திரமான வேலை

விசித்திரமான வேலை

கிரிக்கெட் போட்டிகள் நடக்காத நிலையில், வர்ணனை செய்யவும், விவாதம் செய்யவும் "கன்டன்ட்" கிடைக்காமல் அவதிப்படு வருகிறார்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள். அதில் மைக்கேல் வாகன் விசித்திரமான ஒரு வேலையை செய்து கவனம் ஈர்த்துள்ளார்.

வழுக்கை வீரர்கள் அணி

வழுக்கை வீரர்கள் அணி

உலகிலேயே சிறந்த டெஸ்ட் அணி என பலரும் பல வீரர்களை வைத்து தங்கள் அணியை அறிவித்து முடித்த நிலையில், வழுக்கை வீரர்கள் அணியை அறிவித்துள்ளார் மைக்கேல் வாகன். இதில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் வழுக்கைத் தலை கொண்ட கிரிக்கெட் வீரர்களே.

இத்தனை பேரா?

இத்தனை பேரா?

அட இத்தனை பேரா வழுக்கைத் தலையுடன் கிரிக்கெட் ஆடினார்கள் என நம்மை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது இவரது கிரிக்கெட் அணி. அதில் அப்படி யார், யார் தான் இடம் பெற்றுள்ளனர். அதில் இடம் பெறாத அந்த இந்திய வீரர் யார்?

துவக்க வீரர்கள் யார்?

துவக்க வீரர்கள் யார்?

இந்த வழுக்கை அணியின் துவக்க வீரர்கள் இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் கூச் மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ். இருவருமே தங்கள் அணிகளுக்காக சிறப்பாக ஆடியவர்கள். கிப்ஸ் தென்னாப்பிரிக்க அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகள் ஆடியவர்.

தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா

தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா

மூன்றாம் இடத்தில் மற்றொரு தென்னாப்பிரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா இடம் பெற்றுள்ளார். இவர் வழுக்கைத் தலையுடன், நீண்ட தாடியுடன் காட்சி அளிப்பார். இவர் 2019இல் தான் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காம் வரிசையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், பயிற்சியாளருமான டேரன் லேஹ்மன் இடம் பெற்றுள்ளார்.

கேப்டன் யார்?

கேப்டன் யார்?

மற்றொரு முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜோனாதன் ட்ராட் ஐந்தாம் இடத்தில் பேட்டிங் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரையன் கிளோஸ் ஆறாம் இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரையே கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார் மைக்கேல் வாகன்.

பிரையன் கிளோஸ்?

பிரையன் கிளோஸ்?

யார் இந்த பிரையன் கிளோஸ்? இவர் 1949இல் இங்கிலாந்து அணிக்காக ஆடியவர். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் ஆடிய மிக இளம் வீரர் இவரே. இவரை பற்றி இப்போதுள்ள ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. இவரை எப்படியோ ஞாபகம் வைத்து தன் அணியில் இடம் பெற செய்துள்ளார் வாகன்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்

விக்கெட் கீப்பராக மாட் ப்ரியாரை தேர்வு செய்துள்ளார். இவரும் இங்கிலாந்து வீரரே. பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் டோக் போலிங்கர் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோனை தேர்வு செய்துள்ளார். மற்றொரு வேகப் பந்துவீச்சாளராக பாகிஸ்தான் அணியின் ராணா நவேத் அல் ஹுசைனை தேர்வு செய்துள்ளார்.

நம்ம ஆள் இல்லையே

நம்ம ஆள் இல்லையே

11ஆம் இடத்தில் ஜாக் லீச் அல்லது கிறிஸ் மார்ட்டின் இருவரையும் அறிவித்துள்ளார் மைக்கேல் வாகன். இதில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை. சிலர் வீரேந்தர் சேவாக்கை சேர்த்திருக்க வேண்டும் என கூறி வருந்தி உள்ளனர்.

ஒரு விஷயம் தெரிகிறது

ஒரு விஷயம் தெரிகிறது

இந்த உலகிலேயே சிறந்த வழுக்கைத் தலை டெஸ்ட் அணியில் இருந்து ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. இங்கிலாந்து வீரர்கள் பலருக்கு வழுக்கைத் தலை என்பது தான் அந்த விஷயம். அதனால் தானோ என்னவோ, முன்னாள் இங்கிலாந்து கேப்டனுக்கு இப்படி ஒரு அணியை அறிவிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது.

Story first published: Wednesday, June 10, 2020, 20:54 [IST]
Other articles published on Jun 10, 2020
English summary
Michael Vaughan picks Bald XI team without that Indian player. Some fans feel for not selecting Virender Sehwag in this bald team, which is dominated by England players.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X