For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என் தந்தை இறந்த போது.. ரவி சாஸ்திரியின் அந்த ஒரு வார்த்தை.. எல்லாத்தையும் மாத்திடுச்சு - சிராஜ்

மும்பை: தனது தந்தை இறந்த போது, இந்திய அணி எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்பது குறித்து முகமது சிராஜ் மனம் திறந்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானவர் முகமது சிராஜ். தனது முதல் போட்டியிலேயே கேன் வில்லியம்சன் விக்கெட்டை கைப்பற்றினாலும், 53 ரன்கள் வாரி வழங்கினார்.

சாரி.. உதவ முடியாது.. சிஎஸ்கே உட்பட மொத்தமாக கைவிரித்த 7 அணிகள்.. கடும் கலக்கத்தில் ராஜஸ்தான்! சாரி.. உதவ முடியாது.. சிஎஸ்கே உட்பட மொத்தமாக கைவிரித்த 7 அணிகள்.. கடும் கலக்கத்தில் ராஜஸ்தான்!

தொடர்ந்து, அதிக ரன்களை லீக் செய்ததால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். பேட்ஸ்மேன்களுக்கு அவர் எந்தவிதத்திலும் தாக்கம் ஏற்படுத்தவில்லை, அல்லது ஏற்படுத்த முடியவில்லை.

 தொடர்ந்து வாய்ப்பு

தொடர்ந்து வாய்ப்பு

எனினும், அவர் மீது நம்பிக்கை வைத்த விராட் கோலி, ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு விளையாட தொடர்ந்து சிராஜுக்கு வாய்ப்பு கொடுத்தார். அப்போதும் சிராஜ் தொடர்ந்து அதிக ரன்களை கொடுத்தார். எனினும், விடாப்பிடியாய் கோலி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க, சிராஜ் படிப்படியாக தனது பவுலிங்கில் முன்னேற்றம் கண்டார்.

 லீடிங் விக்கெட் டேக்கர்

லீடிங் விக்கெட் டேக்கர்

இது கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் எதிரொலித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அத்தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பவுலர் சிராஜ் தான். இதனை அடுத்து இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக பந்துவீசினார். இதன் மூலம், தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் தரமான பதிலடி கொடுத்தார்.

 மிகப்பெரும் பலம்

மிகப்பெரும் பலம்

இந்தநிலையில், தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து ABP ஊடகத்துக்கு சிராஜ் அளித்த பேட்டியில், "எனது பந்துவீச்சை நிறைய இம்ப்ரூவ் செய்துள்ளேன். இதற்காக நான் கடினமாக உழைத்தேன். 2019ல் நடந்த ஐபிஎல் தொடரில் நான் மோசமாக பந்து வீசியதால் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதன் பிறகே எனது பவுலிங்கில் அதிக முன்னேற்றங்களை ஏற்படுத்தினேன்.விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரும் பலம்" என்றார்.

 அப்பாவின் ஆசீர்வாதம்

அப்பாவின் ஆசீர்வாதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போதுதான் சிராஜின் தந்தை காலமானார். தந்தையின் மரணம் சிராஜை மன ரீதியாக ரொம்பவே உலுக்கியது. அவர் வாழ்வின் கடினமான காலக்கட்டமாக அது இருந்தது. அப்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு எப்படி உறுதுணையாக இருந்தார் என்பது குறித்து சிராஜ் மனம் திறந்துள்ளார். அதில், "ஆஸ்திரேலிய தொடரின்போது நான் எனது தந்தையை இழந்தேன். அப்போது கோச் ரவி சாஸ்திரியும், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். அந்த இக்கட்டான நேரத்தில் என்னிடம் பேசிய ரவி சாஸ்திரி, "நீ டெஸ்ட் போட்டியில் விளையாட போகிறாய். இந்த போட்டியில் உன் அப்பாவின் ஆசீர்வாதத்துடன் 5 விக்கெட்டுகள் எடுப்பாய் என வாழ்த்தினார்" என்று சிராஜ் கூறியுள்ளார்.

 டெத் ஓவர்களில் சிக்கனம்

டெத் ஓவர்களில் சிக்கனம்

உண்மையில், சிராஜ் இப்போது இருக்கும் ஃபார்ம் அபாரம் எனலாம். அவரால் பேட்ஸ்மேன்களை எளிதில் கட்டுப்படுத்த முடிகிறது. குறிப்பாக, ரன்களை கட்டுப்படுத்த முடிகிறது. வெரைட்டியான பந்துகளை வீசுகிறார். லைன் அன்ட் லெந்தை இம்ப்ரூவ் செய்திருக்கிறார். இப்போதெல்லாம் அவர் பெரிய பெரிய ஹிட்டர்ஸ்களுக்கு கூட டெத் ஓவர்களில் சிக்கனமாக பந்து வீசுவது உண்மையில் அவரது திறமையை வெளிப்படுத்துகிறது.

Story first published: Friday, June 4, 2021, 10:44 [IST]
Other articles published on Jun 4, 2021
English summary
mohammed siraj about ravi shastri and kohli - முகமது சிராஜ்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X