For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் மகனும் களமிறங்கிட்டார்... இதற்கு முன் கலக்கிய தந்தை - மகன்கள் யார் யார் தெரியுமா!

சச்சினின் மகன் அர்ஜூன் இந்திய அணிக்காக விளையாட உள்ளார். இதற்கு முன் கலக்கிய தந்தை, மகன்கள் குறித்த அலசல்.

Recommended Video

சச்சின் மகனும் களமிறங்கிட்டார்...இதற்கு முன் கலக்கிய தந்தை பட்டியல்- வீடியோ

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

இலங்கைக்கு செல்லும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. அதில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

18 வயதாகும் அர்ஜூன் வேகப்பந்து வீச்சுடன், பேட்டிங்கிலும் கலக்கி வருகிறார். அதனால், அவர் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு மிக விரைவிலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இதன் மூலம் இந்திய அணிக்காக விளையாடிய வாய்ப்பை தந்தையும் மகனும் பெற்றுள்ளனர். இதற்கு முன்னும் இந்திய அணிக்காக பல தந்தை - மகன்கள் விளையாடியுள்ளனர். அதில மிகவும் பிரபலமான தந்தை மற்றும் மகன்கள் யார் யார் தெரியுமா.

அமர்நாத்

அமர்நாத்

1933ல் இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா அறிமுகமானது. அந்தப் போட்டியில் விளையாடிய லாலா அமர்நாத் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தார். பேட்டிங், பவுலிங்கில் சிறந்தவரான லாலா அமர்நாத் விக்கெட் கீப்பிங்கும் செய்யும் திறமை கொண்டவர்.

அவருடைய முதல் மகன் சுரிந்தர் அமர்நாந்தும் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்தார். மற்றொரு மகனான மொகிந்தர் அமர்நாத், 18 ஆண்டுகளில் 69 டெஸ்ட்களில் விளையாடினார்.

மஞ்ச்ரேக்கர்

மஞ்ச்ரேக்கர்

1950 மற்றும் 1960களில் இந்திய அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்தவர் விஜய் மஞ்ச்ரேக்கர். 55 டெஸ்ட்களில், 7 சதங்களுடன், 3,208 ரன்கள் சேர்த்தார்.

அவருடைய மகனான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், 1980, 1990களில் இந்திய அணிக்காக விளையாடினார். தந்தையைப் போலவே நடுவரிசை வீரரான சஞ்சய், 37 டெஸ்ட்களில் 4 சதங்களுடன் 2,043 ரன்கள் எடுத்தார். தற்போது மிகச் சிறந்த வர்ணனையாளராக உள்ளார்.

கவாஸ்கர்

கவாஸ்கர்

சச்சினுக்கு முன்னோடியான சுனில் கவாஸ்கர், உலகின் தலைச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். 1971ல் துவங்கி 16 ஆண்டுகள் அவர் அணியின் முக்கிய வீரராக இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் கடந்த முதல் வீரரானார். அதிக சதங்கள் என்ற பிராட்மேனின் சாதனையை முறியடித்தார். டெஸ்டில் 10,122 ரன்கள், 34 சதங்கள் என்ற சாதனைகளுடன் ஓய்வு பெற்றார். அந்த சாதனைகளை சச்சின் முறியடித்தார்.

ஆனாலும் தந்தையின் வழியில் அவருடைய மகன் ரோஹன் கவாஸ்கர் பெரிய அளவில் சாதிக்கவில்லை. 2004ல் 11 ஒருதினப் போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

பின்னி

பின்னி

இந்தியா முதல் முறையாக 1983ல் உலகக் கோப்பையை வென்றபோது, அதில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் ரோஜர் பின்னி. 1980களில் இந்திய அணிக்காக 27 டெஸ்ட்கள் மற்றும் 72 ஒருதினப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவரைப் போலவே அவருடைய மகன் ஸ்டார்ட் பின்னியும் சிரந்த ஆல்ரவுண்டர். ஆனாலும் இந்திய அணியில் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2014ல் வங்கதேசத்துக்கு எதிராக 4.4-2-4-6 என்ற அவருடைய பந்துவீச்சுதான், ஒருதினப் போட்டிகளில் இந்திய வீரரின் சிறந்த பந்துவீச்சாகும்.

most famous father and son played for indian cricket team.

60

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக விளையாடிய வாய்ப்பை தந்தையும் மகனும் பெற்றுள்ளனர். இதற்கு முன்னும் இந்திய அணிக்காக பல தந்தை - மகன்கள் விளையாடியுள்ளனர். அதில மிகவும் பிரபலமான தந்தை மற்றும் மகன்கள் யார் யார் தெரியுமா.

Story first published: Friday, June 8, 2018, 7:49 [IST]
Other articles published on Jun 8, 2018
English summary
most famous father and son played for indian cricket team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X