For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எதிரி நாட்டுக்கும் நட்புக்கரம் நீட்டிய தோனி..!! பாகிஸ்தான் வீரருக்கு தோனி அளித்த இன்ப அதிர்ச்சி..

லாகூர்: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அரசியல் ரீதியாக, பூலோக ரீதியாக எதிரிகளாக இருக்கலாம்.. ஆனால் இந்த இரு துருவங்களை இணைக்க கிரிக்கெட் ஒரு பாலமாகவே அமைந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் மக்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்றால் அவ்வளவு பிடிக்கும். குறிப்பாக தோனி, கோலிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளன

பாகிஸ்தானில் நடைபெறும் பி.எஸ்.எல். போட்டியில் கூட தோனியின் ஜெர்சியை அணிந்து ரசிகர்கள் வருவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஹரிஸ் ராவுஃப்

ஹரிஸ் ராவுஃப்

இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த 28 வயதான வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ராவுஃப், சர்வதேச கிரிக்கெட்டில் அன்மைக் காலமாக அசத்தி வருகிறார். 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளும், 34 டி20 போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் கூட நியூசிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்

தோனி ரசிகர்

தோனி ரசிகர்

ஹரிஸ் ராவுஃப், மிகப் பெரிய தோனியின் ரசிகராம். வீட்டில் தோனியின் போஸ்டரை ஓட்டும் அளவுக்கு தோனி என்றால் பைத்தியமாம். இந்த விசயம் தோனிக்கு சி.எஸ்.கே. மேனஜர் ரஸில் மூலம் தெரியவந்தது. இதனையடுத்து தனது ரசிகருக்கு தோனி இன்ப அதிர்ச்சி ஒன்று கொடுத்துள்ளார். தனது சி.எஸ்.கே. ஜெர்சியை தோனி, பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராவுஃப்க்கு அனுப்பியுள்ளார்.

டிவிட்டரில் மகிழ்ச்சி

டிவிட்டரில் மகிழ்ச்சி

இதனை சற்றும் எதிர்பாராத ஹரிஸ் ராவுஃப், தோனியின் இந்த பரிசால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகிறார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் , கிரிக்கெட் ஜாம்பவானும், கேப்டன் கூலும், இந்த ஜெர்சியை அனுப்பி எனக்கு கௌரவத்தை கொடுத்துள்ளார்.நம்பர் 7 இதயத்தை வென்று வருகிறது. இந்த செயலுக்கு மிகவும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்

Recommended Video

Dhoni மீது புகார் சொன்ன Harbhajan! Teamல் Select செய்யாதது ஏன்? | OneIndia Tamil
ஐ.பி.எலில் பாக் வீரர்கள்

ஐ.பி.எலில் பாக் வீரர்கள்

இதனிடையே, தோனி வெறும் பரிசாக இந்த ஜெர்சியை வழங்கியுள்ளாரா இல்லை, ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க தோனி அளித்த தூதா என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், ஐ.பி.எல். மேலும் வளர்ந்து வருவதால் பாகிஸ்தான் வீரர்களையும் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தோனி இந்த பரிசை பாகிஸ்தான் வீரருக்கு தந்துள்ளார்.

Story first published: Saturday, January 8, 2022, 7:30 [IST]
Other articles published on Jan 8, 2022
English summary
MS Dhoni Gifted his CSK Jersey to Pakistan bowler Haris Rauf எதிரி நாட்டுக்கும் நட்புக்கரம் நீட்டிய தோனி..!! பாகிஸ்தான் வீரருக்கு தோனி அளித்த இன்ப அதிர்ச்சி..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X