183 ஆட்டோகிராப் வாங்காம விடமாட்டேன்.. இன்னும் 30தான் பாக்கி.. தோனி ரசிகரின் அன்புத் தொல்லை!

மும்பை : முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் தீவிர ரசிகர்கள் உலகமெங்கும் நிறைந்துள்ள நிலையில், அவரது ரசிகர் ஒருவர் அவரிடம் வித்தியாசமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் தோனி ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 183 ரன்கள் அடித்துள்ள நிலையில் அதை குறிக்கும் வகையில் அவரிடம் இருந்து 183 ஆட்டோகிராப்களை வாங்க அந்த ரசிகர் திட்டமிட்டு அவரை துரத்தி வருகிறார்.

தன்னுடைய இந்த விருப்பத்தை ஒரு நிபந்தனையுடன் பூர்த்தி செய்ய தோனி ஒப்புக் கொண்டுள்ளதாக பெங்களூருவை சேர்ந்த பிரணவ் ஜெயின் என்ற அந்த ரசிகர் தெரிவித்துள்ளார். 183 ஆட்டோகிராப்கள் நிறைவடைந்த பின்பு மேலும் ஆட்டோகிராப் அளிக்க மாட்டேன் என்பதே அது.

 சர்வதேச போட்டிகளில் விலகல்

சர்வதேச போட்டிகளில் விலகல்

கடந்த உலககோப்பை தொடரில் இந்தியா தோல்வியடைந்து வெளியேறிய நிலையில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, சர்வதேச போட்டிகளில் ஆடுவதை தவிர்த்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

 தோனியின் ஆட்டத்தை காண ஏக்கம்

தோனியின் ஆட்டத்தை காண ஏக்கம்

சர்வதேச போட்டிகளில் தோனி விலகியுள்ள நிலையில், அவர் மீண்டும் விளையாட வேண்டும் என்பதே உலகெங்கிலும் நிறைந்துள்ள அவரது தீவிர ரசிகர்களின் ஏக்கமாகவும் விருப்பமாகவும் உள்ளது.

 வித்தியாசமான கோரிக்கை

வித்தியாசமான கோரிக்கை

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த தோனியின் ரசிகர் பிரணவ் ஜெயின் என்பவர், அவரிடம் வித்தியாசமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். கடந்த 2005ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் தோனி ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் அடித்துள்ள நிலையில், தோனியிடம் இருந்து 183 ஆட்டோகிராப்களை பெற அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 பெங்களூரு ரசிகர் மகிழ்ச்சி

பெங்களூரு ரசிகர் மகிழ்ச்சி

தன்னுடைய இந்த கோரிக்கைக்கு மஹி பாய் ஓகே கூறியதாகவும், ஆனால் ஒரு நிபந்தனையை விதித்துள்ளதாகவும் பிரணவ் தெரிவித்துள்ளார். இந்த 183 ஆட்டோகிராப்களுக்கு பிறகு மேலும் ஆட்டோகிராப்கள் கிடையாது என்பதே அது.

"கூடிய விரைவில் 183ஐ எட்டுவேன்"

தன்னுடைய கைவசம் இதுவரை 153 ஆட்டோகிராப்கள் உள்ளதாகவும், தன்னுடைய இலக்கை கூடிய விரைவில் அடைந்து விடுவேன் என்றும் பிரணவ் மேலும் குறிப்பிட்டார். தோனியின் ஆட்டோகிராப்பை கிளவுஸ்கள், பேட்கள், போஸ்டர்கள் மற்றும் ஸ்கெட்ச்களில் பிரணவ் பெற்றுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
MS Dhoni Fan's unique wish to get 183 Autographs from him
Story first published: Thursday, December 12, 2019, 16:00 [IST]
Other articles published on Dec 12, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X