டோணிக்கு 100ன்னா.. கோஹ்லிக்கு 50 மச்சி!

Posted By: Staff

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நேற்று நடந்த முதல் ஒருதினப் போட்டித் தொடரில் வென்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில், இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

அடுத்தப் போட்டி, கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 21ம் தேதி நடக்க உள்ளது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட், ஒருதினப் போட்டி மற்றும் டி-20 தொடர்களில், 9-0 என்ற வென்று திரும்பிய இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது.

கோஹ்லியின் புதிய சாதனை

கோஹ்லியின் புதிய சாதனை

தொடர்ந்து, 10 ஆட்டங்களில் வென்று கேப்டன் விராட் கோஹ்லி புதிய சாதனைப் படைத்துள்ளார்.

கூல் டோணி

கூல் டோணி

கேப்டன் கூல் டோணி, அனைத்து வகை போட்டிகளையும் கணக்கிட்டால், தொடர்ந்து, 9 போட்டிகளில் வென்றுள்ளார்.

பாண்ட்யாவின் பொறுப்பு

பாண்ட்யாவின் பொறுப்பு

டோணியின் 100வது அரை சதம், அதிரடி ஆட்டத்துடன், பந்துவீ்ச்சிலும் கலக்கிய பாண்டியாவின் பொறுப்பான ஆட்டம் அணியின் வெற்றியை உறுதி செய்தது. ஒரு போட்டியில் ஹாட்ரிக் சிக்சர் அடிப்பதில் ஹாட்ரிக் புரிந்துள்ளார் பாண்டியா.

கேப்டனாக கோஹ்லிக்கு 50வது வெற்றி

கேப்டனாக கோஹ்லிக்கு 50வது வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டி வெற்றி மூலம், டெஸ்ட், ஒருதினப் போட்டி, டி-20 என அனைத்தையும் சேர்த்து, கேப்டனாக, கோஹ்லி, 50வது வெற்றியைப் பெற்றுள்ளார்.

முன்னோடிகள்

முன்னோடிகள்

இந்தப் பட்டியில், டோணி, அசாருதீ்ன், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோர் அதிக வெற்றி பெற்ற கேப்டன்களாக உள்ளனர்.

36 போட்டிகளில்

36 போட்டிகளில்

36 ஒருதினப் போட்டிகளில், 28 வெற்றி, 29 டெஸ்ட்களில், 19 வெற்றி, 5 டி-20 போட்டிகளில் 3 வெற்றி பெற்றுள்ளார் கோஹ்லி.

Story first published: Monday, September 18, 2017, 17:19 [IST]
Other articles published on Sep 18, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற