For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம.. நினைத்ததை "சாதித்த" நியூசி.. இந்தியாவுக்கு "செக்".. முதல் நாளே களைக்கட்டும் ஆட்டம்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி எடுத்துள்ள ஒரு முக்கிய 'மூவ்' முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி, லண்டனில் இன்று தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பேட்டிங்கை செய்தது. இங்கிலாந்து அணியில் ஓலே ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பிரேஸே ஆகியோருக்கு முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடைசில கங்குலிக்கே ஆப்பு... இங்கிலாந்து வைத்த செக்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக தடாலடி முடிவு கடைசில கங்குலிக்கே ஆப்பு... இங்கிலாந்து வைத்த செக்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக தடாலடி முடிவு

 அணியில் சேர்க்கவில்லை

அணியில் சேர்க்கவில்லை

எனினும், இதில் முக்கிய மூவ் என்றால், அது டிரெண்ட் போல்ட்டை நியூசிலாந்து சேர்க்காதது தான். ஆம். இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், அவர் ஃபிரெஷ்ஷாக களம் இறங்க வேண்டும் என்பதற்காக "Family Leave" கொடுத்து போல்ட் சேர்க்கப்படமாட்டார் என்று நேற்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியிருக்கும் நிலையில், வெளியான தகவலை நிரூபிக்கும் வகையில் போல்ட் சேர்க்கப்படவில்லை.

 இந்தியாவுக்கு எதிராக

இந்தியாவுக்கு எதிராக

இதுகுறித்து நியூசிலாந்து கோச் கேரி ஸ்டெட் ,"இங்கிலாந்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் டிரெண்ட் போல்ட்டை நீங்கள் பார்க்க முடியாது என்று நான் நினைக்கிறேன். அவர் வெள்ளிக்கிழமை தான் இங்கிலாந்துக்கே வருகிறார். அவர் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தயாராக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனினும், அவர் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பிருக்கலாம் என்று நினைக்கிறேன்" என்று நேற்று கூறியிருந்தார். (ஏதோ ஜிம்பாப்வே கோச் மாதிரி-ல பேசுறாப்ல)

 பாரபட்சமின்றி விக்கெட்டுகள்

பாரபட்சமின்றி விக்கெட்டுகள்

எது எப்படியோ.. இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் முக்கிய நியூசிலாந்து பவுலராக இருப்பவர் டிரெண்ட் போல்ட். இவரது Pace-ஐ சமாளிப்பது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். குறிப்பாக, ஓப்பனர்ஸ்களுக்கு. இவரது ஸ்விங் + பேஸ் அவ்வளவு எளிதில் கெஸ் செய்ய முடியாது. இங்கிலாந்து பிட்சுகள், ஏறக்குறைய நியூசிலாந்து பிட்சுகளை போன்று இருக்கும் என்பதால், பாரபட்சமின்றி விக்கெட்டுகள் சரியும். இங்கிலாந்தில், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 21 விக்கெட்டுகளை அறுவடை செய்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பெஸ்ட் 5/57.

 கோலிக்கு தான் குடைச்சல்

கோலிக்கு தான் குடைச்சல்

இந்நிலையில், இன்று தொடங்கியுள்ள நியூசிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் யாருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ இல்லையோ, நியூசிலாந்துக்கு இது மிக முக்கியமான சீரிஸ் ஆகும். இந்த இரண்டு போட்டிகளில் கிடைக்கும் அனுபவத்தை, பாடத்தை அப்படியே, இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் Implement செய்து, கோலிக்கு படைக்கு குடைச்சல் கொடுக்க முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Wednesday, June 2, 2021, 21:03 [IST]
Other articles published on Jun 2, 2021
English summary
nz dropped trent boult eng vs nz - நியூசிலாந்து vs இங்கி.,
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X