For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இரட்டை பதவி விவகாரம்..! அவர் மீது எந்த புகாரும் இல்லை..! பிசிசிஐ சர்டிபிகேட்..! அப்பாடா.. நிம்மதி

டெல்லி: தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக டிராவிட் நியமிக்கப்பட்டதில் ஆதாயம் தரும் இரட்டை பதவி புகார்கள் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் நியமித்த சிஓஏ நற்சான்றிதழ் அளித்துள்ளது.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் பெயர் அண்மையில் அறிவிக்கப் பட்டது. கிரிக்கெட் முன்னாள் வீரரான அவர் இண்டியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் பதவியிலும் இருந்து வருகிறார்.

ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு டையது. எனவே எப்படி தேசிய கிரிக்கெட் அகாடமி தலைமை பதவி வகிக்க முடியும் என்று டிகே ஜெயின் தரப்பில் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கைகளில் இருக்கிறது

கைகளில் இருக்கிறது

ஆனாலும் தற்போது இந்த விவகாரம் பிசிசிஐ குறைதீர்ப்பாளர் மற்றும் நீதி அதிகாரி டிகே ஜெயின் முடிவில்தான் இருக்கிறது. இதனை சிஓஏ குழுவில் புதிதாக இணைந்த லெப்டினண்ட் ஜெனரல் ரவி தோக்டே தெரிவித்தார்.

புகார் எதுவும் இல்லை

புகார் எதுவும் இல்லை

அவர் மேலும் கூறியிருப்பதாவது: டிராவிட் விவகாரத்தில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி புகார் எதுவும் இல்லை. இனி டிகே ஜெயின் முடிவெடுக்கட்டும் எங்களைக் கேட்டால் நாங்கள் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி விட்டோம் என்று தெரிவிப்போம்.

பதில் அளிக்கப்படும்

பதில் அளிக்கப்படும்

டிகே ஜெயின் இரட்டைப்பதவி நலன் இருக்கிறது என்றால் நாங்கள் எங்கள் பதிலை அவர்களுக்கு தெரிவிப்போம். அதாவது ஏன் இரட்டைப் பதவி இல்லை என்று பதில் அளிப்போம் என்றார்.

ஊதியமில்லா விடுப்பு

ஊதியமில்லா விடுப்பு

இதுகுறித்து பிசிசிஐ கூறியிருப்பதாவது: தேசிய கிரிக்கெட் அகாடமி பணியில் டிராவிட் அமர்த்தப் பட்ட போது இண்டியா சிமெண்ட்ஸ் பணியை விட வேண்டும் அல்லது விடுப்பில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து சம்பளம் இல்லாத விடுப்புக்கு டிராவிட் இண்டியா சிமெண்ட்சிடம் கோரியுள்ளார். ஆகவே ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரம் இப்போது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

திட்டங்கள் உண்டு

திட்டங்கள் உண்டு

தேசிய கிரிக்கெட் அகாடமியை சர்வதேச தரத்துக்கு உயர்த்த டிராவிடுடன் சேர்ந்து திட்டங்களை வகுத்துள்ளோம். அவரும் அதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவருடன் சேர்ந்து பணியாற்ற உள்ளோம் எனவும் உறுதி அளித்துள்ளது.

Story first published: Wednesday, August 14, 2019, 11:28 [IST]
Other articles published on Aug 14, 2019
English summary
No conflict of interest for former player rahul dravid.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X