For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை பத்தி பேச யாருக்கும் தகுதி இல்லை? முதல்ல கிரிக்கெட் பத்தி தெரிஞ்சுகிட்டு வாங்க

Recommended Video

தோனியை பற்றி விமர்சனங்களுக்கு ரவி சாஸ்திரி பதிலடி- வீடியோ

மும்பை : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை என கூறியுள்ளார் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

தோனி பேட்டிங்கில் சரியாக ஆடுவதில்லை என வந்த விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்ட போது ரவி சாஸ்திரி இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், தோனி குறித்து பேசும் முன் கிரிக்கெட் பற்றி ஒரீரு விஷயங்களை தெரிந்து கொண்டு வர வேண்டும் எனவும் சாடினார் அவர். தோனிக்கு ஆதரவாக ரவி சாஸ்திரி என்ன பேசினார் என்பதை குறித்து பார்ப்போம்.

தொடர்ந்து மூன்று அரைசதங்கள்

தொடர்ந்து மூன்று அரைசதங்கள்

தோனி கடந்த ஆண்டு பேட்டிங்கில் மிக மோசமான பார்மில் இருந்தார். அதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான தோனி, 2019இல் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்து அட்டகாசமான பார்முக்கு வந்தார்.

யாருக்கும் தகுதி இல்லை

யாருக்கும் தகுதி இல்லை

எனினும், சிலர் தோனி அதிரடியாக ஆடவில்லை என சில காரணங்கள் கூறி அவரை விமர்சித்து வருகின்றனர். அதைப் பற்றி ரவி சாஸ்திரி பேசிய போது, "தோனியை பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை. அவரை பற்றி பேசுகிறவர்களுக்கு கிரிக்கெட் பற்றி ஏதாவது தெரியுமா?" என நெத்தியடியாக கூறினார்.

தோனி யார் தெரியுமா?

தோனி யார் தெரியுமா?

மேலும், "சச்சின், கபில் தேவ், சுனில் கவாஸ்கர் ஆகியோரைப் போன்றவர் தோனி. இது போன்றவர்கள் 30-40 வருடங்களுக்கு ஒரு முறை தான் வருவார்கள். தோனி இந்த விளையாட்டின் அணிகலன். அவர் நம்பர் 1 டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தவர். இரண்டு உலகக்கோப்பையை தன் பெயரில் வைத்துள்ளவர். அவர் எந்த ட்ராபியை வெல்லவில்லை? கூறுங்கள்" என அதிரடியாக பேசினார் ரவி சாஸ்திரி.

ஒரே ராத்திரியில் தோனி கிடைப்பாரா?

ஒரே ராத்திரியில் தோனி கிடைப்பாரா?

"தோனி குறித்து பேசும் முன் மக்கள் கிரிக்கெட் குறித்து ஒரீரு விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன். இது போன்ற ஒருவரை ஒரே ராத்திரியில் நீங்கள் பெற்று விட முடியாது" என்றார் ரவி சாஸ்திரி.

விக்கெட் கீப்பிங்கில் அசத்தல்

விக்கெட் கீப்பிங்கில் அசத்தல்

தோனி பேட்டிங்கில் பார்முக்கு திரும்பியுள்ளதோடு, விக்கெட் கீப்பிங்கில் வழக்கம் போல தன் பிரத்யேக பாணியில் விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்து வருகிறார். அதையும் ரவி சாஸ்திரி குறிப்பிட்டு பாராட்டினார்.

உலகக்கோப்பையில் தோனி

உலகக்கோப்பையில் தோனி

தோனி 2019 உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெற உள்ளார் என கூறப்பட்டு வரும் நிலையில், அவர் பேட்டிங்கில் பார்முக்கு திரும்பி உள்ளார். அதோடு அவரது நீண்ட அனுபவமும் இருப்பதால், உலகக்கோப்பையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்[பு அதிகரித்துள்ளது என்பதே உண்மை.

Story first published: Wednesday, February 6, 2019, 18:50 [IST]
Other articles published on Feb 6, 2019
English summary
Ravi Shastri says Nobody is good enough to criticise Dhoni.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X