For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என் டீம் பிளேயருக்கு மரியாதை இல்லையா.. அப்ப இப்படித்தான் பண்ணுவேன்.. ஆஸி கேப்டனை கதற விட்ட கங்குலி!

மும்பை : அந்த சம்பவம் 2001 இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது.

Recommended Video

மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும்... ஆஸ்திரேலியாவுக்கு பாடம் எடுத்த கங்குலி

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர், இந்திய வீரர் ஒருவரிடம் மோசமாக நடந்து கொண்டார்.

அதை அறிந்த கேப்டன் சௌரவ் கங்குலி ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ்-வை கடுமையாக சோதிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

எனக்கு பிடித்த நடிகர்.. உருகிய சச்சின்.. இர்பான் கானுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!எனக்கு பிடித்த நடிகர்.. உருகிய சச்சின்.. இர்பான் கானுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

சுயசரிதையில் எழுதிய ஸ்டீவ் வாஹ்

சுயசரிதையில் எழுதிய ஸ்டீவ் வாஹ்

அப்போது கங்குலி செய்த காரியத்தை ஸ்டீவ் வாஹ் தன் சுயசரிதையில் எழுதினார் என்றால் எந்த அளவு கங்குலி அன்று அவரை வெறுப்பேற்றினார் என்பது புரியும். இது பற்றி நீண்ட காலம் மழுப்பி வந்த கங்குலி பின்னர் 2006இல் தான் ஆஸ்திரேலிய அணிக்கு பாடம் கற்பிக்கவே அப்படி நடந்து கொண்டேன் எனக் கூறி அதிர வைத்தார்.

கேப்டன் கங்குலி

கேப்டன் கங்குலி

2001இல் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது உலகையே அச்சுறுத்தி வந்த ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. அந்த தொடரில் பல மறக்க முடியாத சம்பவங்கள், போட்டிகள் நடந்தன.

ஈடன் கார்டன் டெஸ்ட்

ஈடன் கார்டன் டெஸ்ட்

அதில் ஒன்று தான் 2001 கொல்கத்தா ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டி. அந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா ஃபாலோ ஆன் பெற்று பின் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மனின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றது. அடுத்து சென்னையில் நடந்த டெஸ்டில் வென்றது.

டெஸ்ட் தொடர் வெற்றி

டெஸ்ட் தொடர் வெற்றி

முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று இருந்த நிலையில், அடுத்த இரு போட்டிகளில் இந்தியா வென்று டெஸ்ட் தொடரை 2 - 1 என கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியின் தொடர் டெஸ்ட் வெற்றிப் பயணத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

அந்த சம்பவம்

அந்த சம்பவம்

இதன் இடையே தான் அந்த சம்பவம் நடைபெற்றது. இந்திய அணியின் ஜவகல் ஸ்ரீநாத் ஒரு போட்டியின் இடையே களத்தை விட்டு வெளியேறி உள்ளார். அது குறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜான் புக்கானன் அவரிடம் மோசமான முறையில் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜவகல் ஸ்ரீநாத் புகார்

ஜவகல் ஸ்ரீநாத் புகார்

அடுத்து நடந்த அணிக் கூட்டத்தில் இது பற்றி ஜவகல் ஸ்ரீநாத் கூறி உள்ளார். ஜான் புக்கானன் பேசிய விதம் மோசமாக இருந்ததாக அவர் கூறினார். அதை அறிந்த கேப்டன் கங்குலி கோபம் அடைந்தார். நாம் யார் என ஆஸ்திரேலிய அணிக்கு காட்ட வேண்டும் என்ற முடிவை எடுத்தார்.

என்ன செய்தார் கங்குலி?

என்ன செய்தார் கங்குலி?

அதன் பிறகு நடந்த சில போட்டிகளில் டாஸ் போடுவதற்கு ஸ்டீவ் வாஹ் சென்று நின்ற பின்னும் சில நிமிடங்களுக்கு வராமல் காலம் தாழ்த்தினார் சௌரவ் கங்குலி. அது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. கங்குலியிடம் அது பற்றி அப்போது கேட்கப்பட்டது.

நிறைய வேலை

நிறைய வேலை

அதற்கு கங்குலி அளித்த பதில் தாறுமாறு ரகம். காலையில் எழுந்தால் நிறைய வேலை உள்ளது. எல்லோரையும் கிளப்ப வேண்டும். தேர்வுக் குழுவுடன் பேச வேண்டும். அதனால், நான் சில நிமிடங்கள் தாமதமாக வந்திருக்கலாம் என்றார்.

பிளேசர் காணோம்

பிளேசர் காணோம்

மேலும், ஒரு முறை இரண்டு அணி கேப்டன்களும் டாஸ் போடும் போது குறிப்பிட்ட பிளேசர் அணிந்து வர வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அந்த நாளில் எனது பிளேசர் எனக்கு கிடைக்கவில்லை. அதை தேடி எடுக்க நேரமானது எனவும் கூறினார்.

டிரவுசருடன் வந்த கங்குலி

டிரவுசருடன் வந்த கங்குலி

ஆனால், ஒரு போட்டியில் அணியின் உடை கூட அணியாமல் பயற்சியில் அணிந்திருக்கும் டிரவுசருடன் வந்து டாஸ் போட்டு ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தார் கங்குலி. ஆனால், உண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணிக்கு மரியாதை அளித்தால் மட்டுமே மரியாதை கிடைக்கும் என உணர்த்தினார் கங்குலி.

2003இல் என்ன சொன்னார்?

2003இல் என்ன சொன்னார்?

அடுத்து 2003 டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் வாஹ், இந்த முறையாவது டாஸ் போட சரியான நேரத்துக்கு வாருங்கள் என கங்குலியிடம் கூறினார். நீங்கள் மரியாதையாக நடந்து கொண்டால் நானும் நடந்து கொள்வேன் என்று கெத்தாக சொன்னார் கங்குலி.

Story first published: Wednesday, April 29, 2020, 20:23 [IST]
Other articles published on Apr 29, 2020
English summary
On 2001, Ganguly taught hard lesson for Australia by not coming to toss on time. He later admitted that he did that deliberataely to teach them a lesson to australian team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X