For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 மாதம் அடைத்து வைத்திருந்தார்கள்.. பாகிஸ்தானில் மட்டுமே இப்படி நடக்கும்..வசீம் அக்ரம் உருக்கம்

கராச்சி : பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வசீம் அக்ரம் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை சுல்தான் மெமோயர் என்று சுயசரிதை புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

அதில் தமது விருப்பமின்றி பாகிஸ்தானில் இரண்டு மாதம் ஒரு அறையில் அடைக்கப்பட்டு இருந்தேன் என்று வசீம் அக்ரம் பரபரப்பு புகார் ஒன்றை வைத்துள்ளார்.

இதே மாதிரி சம்பவம் உலகில் வேறு எங்கும் நடைபெற்றாலும் அது பெரிய குற்றமாகும். ஆனால் பாகிஸ்தானில் அது எல்லாம் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விராட் கோலி ஓய்வு அறிவிப்பு??.. தோனியின் பாணியில் கூறிய தகவல்.. குழப்பத்தில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்! விராட் கோலி ஓய்வு அறிவிப்பு??.. தோனியின் பாணியில் கூறிய தகவல்.. குழப்பத்தில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்!

அடிமையாகி விட்டேன்

அடிமையாகி விட்டேன்

இது குறித்து அவர் குறிப்பிடுகையில் இங்கிலாந்தில் நான் ஒரு பார்ட்டியில் ஈடுபட்டிருந்தபோது, யாரோ ஒருவர் இதை பயன்படுத்தி பார்க்கிறீர்களா என்று கேட்டார். நானும் நாம் தான் ஓய்வு பெற்று விட்டோமே சரி என்னவென்று பார்ப்போம் என்று ஒரு பவுடரை பயன்படுத்தினேன். அந்த சிறு துளி பிறகு கிராம் கணக்கில் ஆகிவிட்டது. நான் பாகிஸ்தானுக்கு சென்ற நிலையில் அது பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால் அது எனக்கு கிடைத்தது.

வாழ்க்கையை கெடுத்தது

வாழ்க்கையை கெடுத்தது

நாளடைவில் போதை மருந்து இல்லாமல் என்னால் செயல்பட முடியாது என்பதை நான் தெரிந்து கொண்டேன். போதைப் பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி என் வாழ்க்கையை கெடுத்தது. நான் என்னுடைய மனைவியை காயப்படுத்தி இருக்கிறேன். அப்போது என் மனைவி தான், உங்களுக்கு உதவி தேவை. போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர சில முகாங்கள் இருக்கிறது. அங்கு செல்லுங்கள் என்று கூறினார்.

மோசமான காலம்

மோசமான காலம்

என் மனைவியின் பேச்சு கேட்டு நான் பாகிஸ்தானில் உள்ள ஒரு முகாமுக்கு சென்றேன். ஆனால் என் அனுமதியின்றி என்னை அங்கு இரண்டரை மாதங்கள் அடைத்து வைத்திருந்தனர். இது உலகத்தில் எந்த இடத்திலும் இது சட்டவிரோதமானது. ஆனால் பாகிஸ்தானில் அப்படி கிடையாது. அந்த முகாம் எனக்கு எவ்வித பயனையும் தரவில்லை. அங்கிருந்து வந்தவுடன் நான் இன்னும் மோசமாக இருந்தேன்.

மனைவி காலமானார்

மனைவி காலமானார்

நீங்கள் படங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள் மறுவாழ்வு முகாமில் புல் தரைகள் உடற்பயிற்சி கூடம் மருத்துவர்களின் பாடம் என நிறைய இருக்கும். ஆனால் நான் பாகிஸ்தானில் சென்ற இடத்தில் வெறும் 8 அறை மட்டும் தான் இருந்தது. அதில் நான் தங்கிய காலம் மிகவும் கடினமானது.அங்கிருந்து வெளியே வந்த சில நாட்களிலே என் மனைவி காலமானார்.

பிள்ளைகளை வளர்க்க தெரியவில்லை

பிள்ளைகளை வளர்க்க தெரியவில்லை

அதன் பிறகு நானே நான் செய்த தவறை உணர்ந்தேன். போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு வர முயற்சி செய்து எனக்கு இரண்டு சிறுவர்கள் இருந்தனர். மேலை நாடுகளில் தந்தையும் தாயும் குழந்தைகளை சரிசமமாக பார்த்துக் கொள்வார்கள். ஆனால் நமது கலாச்சாரத்தில் தாய் மட்டும் தான் குழந்தையை பார்த்துக் கொள்வார். என் மனைவி இல்லாத போது நான் மிகவும் கஷ்டப்பட்டேன். என் குழந்தைகளுக்கு எங்கு ஆடை வாங்குவது கூட எனக்கு தெரியாது.

திருந்தினேன்

திருந்தினேன்

அவர்கள் என்ன சாப்பிடுவார்கள் அவர்கள் எந்த வகுப்புக்கு செல்ல வேண்டும் என்று ஒன்றும் எனக்கு தெரியாது. என் குழந்தைகள் நண்பர்களின் பெற்றோர்கள் தான் அவர்களுக்கு உதவினார்கள். அதன் பிறகு கராச்சிக்கு வந்து குழந்தைகளை புது பள்ளியில் சேர்த்தேன். அப்போதுதான் மெல்போனில் தான் சந்தித்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்.

இளைஞர்களுக்கு அறிவுரை

இளைஞர்களுக்கு அறிவுரை

இளைஞர்களுக்கு என்னுடைய அறிவுரை எல்லாம் நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள். உங்கள் நண்பர்கள் தேர்வு செய்யும்போது கவனமாக இருங்கள். ஏனென்றால் நீங்கள் தவறான பாதைக்கு செல்ல அதுவே முக்கிய காரணமாக இருக்கும்.வெகு சிலரே அந்த பாதையில் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள்.அதில் நானும் ஒருவன். எனவே நல்ல பழக்க வழக்கங்கள் உடைய நண்பர்களே தேர்வு செய்து அவர்களுடைய பழகுங்கள் என்று வசிம் அக்ரம் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Story first published: Saturday, November 26, 2022, 20:51 [IST]
Other articles published on Nov 26, 2022
English summary
Pakistan legend Wasim akram reveals his black days on his autobiography 2 மாதம் அடைத்து வைத்திருந்தார்கள்.. பாகிஸ்தானில் மட்டுமே இப்படி நடக்கும்..வசீம் அக்ரம் உருக்கம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X