For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் சஸ்பென்ஸ் முடிந்தது.. சென்னை, ராஜஸ்தானுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகள் களமிறக்கம்

By Veera Kumar

மும்பை: 2 வருடம் சஸ்பெண்ட் தண்டனைக்கு உள்ளாகியுள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு மாற்றாக புனே மற்றும் ராஜ்கோட் என்ற பெயரில் இரு அணிகள் தேர்வாகியுள்ளன.

2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின்போது மேட்ச் பிக்சிங் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி முத்கல், முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.

உறுதி

உறுதி

நீதிபதி லோதா குழுவினர் தங்களது விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கியது. இதில் சென்னை அணியின், குருநாத் மெய்யப்பனும், ராஜஸ்தான் அணியின் ராஜ்குந்த்ராவும் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

2 வருட தடை

2 வருட தடை

இதனால் அவர்கள் சார்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் இரண்டு ஆண்டுகளுக்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

ஆயுட் தடை

ஆயுட் தடை

மேலும் கிரிக்கெட் விளையாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்திய குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு ஆயுட்கால தடையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த இரண்டு அணிகளுக்குப் பதிலாக இரண்டு அணிகளை தேர்ந்தெடுக்க டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் இன்று திறக்கப்பட்டது.

புனே, ராஜ்கோட் அணிகள்

புனே, ராஜ்கோட் அணிகள்

இதில் அடுத்த வருடம் (2016 சீசன்) புனே என்ற பெயரில் ஒரு அணியை நடத்துவதற்கான உரிமையை தொழிலதிபர் சஞ்சீவ் கோயன்காவின் நியூ ரைசிங் நிறுவனம் பெற்றுள்ளது. அதேபோல் இன்டெக்ஸ் என்ற செல்போன் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கோட் அணியை வாங்கியுள்ளது.

16 கோடி

16 கோடி

புனே அணிக்கான உரிமத்தை வாங்குவதற்காக நியூ ரைசிங் நிறுவனம் பிசிசிஐக்கு 16 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும். இதேபோல் ராஜ்கோட் அணி உரிமையாளர் இன்டெக்ஸ், பிசிசிஐக்கு 10 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 8, 2015, 16:53 [IST]
Other articles published on Dec 8, 2015
English summary
Pune and Rajkot were today announced as the 2 new franchises in the Indian Premier League (IPL). They will replace the suspended Chennai Super Kings (CSK) and Rajasthan Royals (RR).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X