ராகுல் டிராவிட்டை வெட்கப்பட வைத்த ஜூனியர் டீம்

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: 6 முறை பைனலுக்கு போய் அதில் நான்காவது முறையாக சாம்பியனான 19 வயதுக்குட்பட்டோர் இந்திய கிரிக்கெட் அணி, கோச் ராகுல் டிராவிடை வெட்கப்பட வைத்துள்ளது.

நியூசிலாந்தில் நடந்த 12வது 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பைனலில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியனானது.

Dravid not happy

இதன் மூலம் 6வது முறையாக பைனலுக்கு சென்று அதில் நான்காவது முறையாக நம்ப பசங்க கோப்பையை வென்றனர். இந்த தொடரில் ஒரு ஆட்டத்தில்கூட தோற்காத அணி என்ற பெருமையையும் இந்த அணிக்கு கிடைத்துள்ளது.

இந்திய சீனியர் அணிக்கு பல புதிய வீரர்களை இந்த உலகக் கோப்பை அடையாளம் காட்டியுள்ளது. இதில் விளையாடிய ஒவ்வொரு வீரரையும் முன்னாள் வீரர்கள் என பலரும் பாராட்டு வருகின்றனர்.

குறிப்பாக கோச் ராகுல் டிராவிட் வெகுவாக பாராட்டப்படுகிறார். அவருக்கு பிசிசிஐ ரூ.50 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.

டுவிட்டர், பேஸ்புக் என இருக்கிற எல்லா சமூகதளங்களிலும் கோச் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆனால், கோச் டிராவிட் வருத்தத்தில் உள்ளார்.

வெட்கப்படுகிறேன், வேதனைப் படுகிறேன்’[ என விசு ஸ்டைலில் டிராவிட் கூறியுள்ளார். விஷயம் வேறொன்றுமில்லை.

“வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் வென்றார்கள். அவர்களுடைய திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டனர். அணிக்கு கிடைக்க வேண்டிய, வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய பெருமை எனக்கு கிடைப்பது வேதனையாக உள்ளது, வெட்கமாக உள்ளது” என்று டிராவிட் கூறியுள்ளார்.

சச்சின், சேவாக், கங்குலி என அதிரடி ஆட்டக்காரர்கள் அணியில் இருந்தபோதும், சைலண்டாக, அளப்பறை இல்லாமல் சாதித்தவர், இந்திய நெடுஞ்சுவர் டிராவிட். தற்போதும் இவ்வாறு அவர் கூறியுள்ளது, அதான் டிராவிட் என்ற சொல்ல வைத்துள்ளது.


Story first published: Sunday, February 4, 2018, 18:41 [IST]
Other articles published on Feb 4, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற