For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விஜய் சங்கரெல்லாம் சரிபட்டு வரமாட்டார்... ராகுல் தான் கரெக்ட்.. மறுபடியும் ஆரம்பித்த வெங்சர்க்கார்

மும்பை:உலக கோப்பை போட்டிகளில் விஜய் சங்கருக்கு பதில், கே எல் ராகுலை களத்தில் இறக்கலாம் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் கூறியிருக்கிறார்.

இன்னும் 2 வாரங்களே உள்ளன உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்க. கோலி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அடுத்த ஒரு சில தினங்களில் இங்கிலாந்து புறப்படுகிறது. உலக கோப்பைக்கான இந்திய அணியில் யார்? யார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

Rahul is suitable player for no. 4 spot instead of vijay shankar, says dilip vengsarkar

வழக்கம் போல... ஆள் மாற்றி ஆள் மாற்றி 4ம் இடத்தில் யாரை இறக்க வேண்டும் என்ற யோசனைகள் மட்டும் நின்றபாடில்லை. அந்த விவகாரத்தில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை கொளுத்தி போட்டிருக்கிறார் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார்.

பார்ம் அவுட் ஆகி.. சோர்ந்து போன போது.. தோனி அனுப்பிய அந்த மெசேஜ்.. நெகிழும் குல்தீப் யாதவ்! பார்ம் அவுட் ஆகி.. சோர்ந்து போன போது.. தோனி அனுப்பிய அந்த மெசேஜ்.. நெகிழும் குல்தீப் யாதவ்!

4ம் இடத்துக்கு கே எல் ராகுல் தான் பொருத்தமான வீரர்.. அவரை களம் இறக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். திலீப் வெங்சர்க்கார் தெரிவித்திருப்பதாவது: துவக்க வீரர்களாக தவான், ரோகித் ஆகியோர் இருக்கின்றனர். 3வது வீரராக கேப்டன் கோலி இருக்கிறார்.

4ம் வரிசை என்பது முக்கியமான வரிசை. எனவே, அந்த இடத்தில் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் தான் இறங்க வேண்டும். அதன்படி, ராகுல் தான் அந்த இடத்துக்கு பொருத்தமானவர். தொடக்க விக்கெட்டுகள் விரைவில் விழுந்தாலும் ராகுல் அணிக்கு வலு சேர்ப்பார். எனவே அவர் தான் 4ம் இடத்துக்கு சரியான வீரர் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் 4ம் வரிசை வீரர் மற்றும் மாற்று விக்கெட் கீப்பராக யார் என்பது பெரும் கேள்வியாக இருந்தது. 4ம் வரிசையை மனதில் வைத்து விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்தது தேர்வுக்குழு. இந்த 2 தேர்வுகளுக்குமே கேப்டன் விராட் கோலி ஆதரவு தெரிவித்தது, குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 17, 2019, 14:34 [IST]
Other articles published on May 17, 2019
English summary
Rahul is suitable player for no. 4 spot instead of Vijay Shankar, says Dilip Vengsarkar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X