For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இரட்டை அர்த்தம்.. மது.. பெண்களுடன் கடலை போடும் ரவி சாஸ்த்ரி..இந்த வயசுல இது தேவையா..?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்த்ரி, பார்டி செய்வதிற்கு பெயர் போனவர்.

தாம் இளம் வயதில் இருக்கும் போது ரோமியாகவே இருந்த ரவி சாஸ்த்ரி, பயிற்சியாளர் ஆனதும் கூட எப்போது தனி உலகத்தில் இருப்பது போல் காட்சி அளிப்பார்.

எனினும் ரவி சாஸ்த்ரி தலைமையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா டெஸ்ட் போட்டியை வென்றது.

பெரும் ஆபத்தில் ஐபிஎல் .. பணப்பிரச்சினையில் சிக்கிய பிசிசிஐ.. ரசிகர்கள் நினைத்தால் இதுவும் முடியுமா?பெரும் ஆபத்தில் ஐபிஎல் .. பணப்பிரச்சினையில் சிக்கிய பிசிசிஐ.. ரசிகர்கள் நினைத்தால் இதுவும் முடியுமா?

கடலை போடும் சாஸ்த்ரி

கடலை போடும் சாஸ்த்ரி

இந்த நிலையில், பெண் ஒருவருடன் ரவி சாஸ்த்ரி கடலை போடுவது போலவும், பெண்களுடன் பார்டி செய்வது போலவும், பிடித்த இடம் தாய்லாந்து என்று சொல்வது போலவும் வீடியோக்களும், புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் உலா வந்தது. இறுதியில், அது விளம்பரம் என தெரியவந்தது.

இரட்டை அர்த்தம்

இரட்டை அர்த்தம்

விளம்பரமாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா.? மகள் வயதில் இருக்கும் பெண்ணுடன் ரவி சாஸ்த்ரி உனக்கு பாய் பிரண்ட் இருந்தாலும், நான் உனக்கு இரண்டாவதாக இருக்கிறேன். நான் கிரிக்கெட்டில் தான் பேட்ஸ்மேன் உனக்கு கீப்பராக செயல்படுகிறேன் என்று இரட்டை அர்த்தம் வரும் வகையில் உள்ள வசனங்கள் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தவறான காட்சிகள்

தவறான காட்சிகள்

மேலும் வீரர்கள் மது அருந்தும் போதும், அதனை கீழே ஊற்றி வீணாக்காதே என்று அந்த பாட்டிலை புடுங்குவதும், பிடித்த கிரவுண்ட் தாய்லாந்து என்று சொல்வதும், பத்திரிகையாளர்களிடம் பேசுவது பிடிக்காது என்று கூறுவது போன்ற விசயமும் இந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது. ரவி சாஸ்த்ரியை வித்தியாசமாக காட்டுகிறேன் என்று, பெண்களையும், வயதானவர்களையும் கொச்சைப்படுத்தும் அளவுக்கு இந்த விளம்பரம் அமைந்துள்ளது.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

மேலும், நாட்டுக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் எப்போதும் மது, பார்டி, பெண்கள் என்று இருப்பார்கள் என்று சித்தரிப்பது போல் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. இதே நிறுவனத்தின் விளம்பரத்தில் கடந்த ஆண்டு ராகுல் டிராவிட்டை தாதா போல் காட்டி ரசிக்க வைத்தனர். ஆனால் இப்போது ரவி சாஸ்த்ரியை வைத்து எடுத்துள்ள விளம்பரம் முகம் சுளிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. வரும் நாட்களில் மீம் கிரியேட்டர்ஸ்க்கு நல்ல டேம்பிளட்கள் இந்த விளம்பரத்தில் கிடைக்கும்.

Story first published: Saturday, May 21, 2022, 21:10 [IST]
Other articles published on May 21, 2022
English summary
Ravi shastri New Advertisement in Bad taste created controversy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X