For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிரா செய்வதற்காக மைதானத்துக்கு வராதீங்க... இந்திய அணிக்கு 'டைரக்டர்' ரவிசாஸ்திரியின் அட்வைஸ்

By Mathi

கொழும்பு: கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளை டிரா செய்வதற்காக மைதானத்துக்கு வராமல்.. ஆட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்; 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பு அவசியம் என்று இந்திய அணிக்கு இயக்குநர் ரவிசாஸ்திரி அறிவுரை கூறியுள்ளார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டு அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேவில் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநர் ரவிசாஸ்திரி காலேயில் நேற்று செய்தியாளர்களிடம்

வெற்றிதான் முக்கியம்

வெற்றிதான் முக்கியம்

டெஸ்ட் போட்டிகளை டிரா செய்வதற்காக கிரிக்கெட் மைதானத்துக்கு வரக்கூடாது. ஆட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையிலும், 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தும் பாணியிலும் கிரிக்கெட்டை விளையாட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

20 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்குரிய சாத்தியக் கூறுகள் என்ன என்பதை வீரர்கள் சிந்திக்க வேண்டும். டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற தொடங்குவது மிகவும் முக்கியமானதாகும்.

இனியும் பாடம் கற்க முடியாது

இனியும் பாடம் கற்க முடியாது

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களுடன் கற்று கொள்ளுதல் காலம் முடிந்து விட்டது. தற்போது இந்திய அணியினர் அதிக அளவில் அன்னிய மண்ணில் விளையாடுகின்றனர். அதில் கிடைக்கும் அனுபவங்களை, அதேபோன்ற சூழ்நிலையில் மீண்டும் விளையாடுகையில் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

20 விக்கெட்டுகளை வீழ்த்தனும்

20 விக்கெட்டுகளை வீழ்த்தனும்

கூடுதலாக ஒரு பவுலரை வைத்து இருப்பதால் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கும் என்றால் அந்த யுக்தியை பயன்படுத்துவதில் தவறில்லை. அதிக அளவில் ரன்கள் குவிப்பது மட்டுமின்றி, 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டியதும் வெற்றிக்கு இன்றியமையாதது.

ஆஷஸை பாருங்க..

ஆஷஸை பாருங்க..

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பந்து வீச்சில் இருக்கும் கூடுதல் பலம் தான் முக்கியமானதாகும் என்பது தெரிகிறது. கடந்த காலங்களில் இலங்கை அணியில் சிறந்த வீரர்கள் பலர் இடம் பிடித்து இருந்தனர்.

சவாலான தொடர்தான்..

சவாலான தொடர்தான்..

அணியாக ஒருங்கிணைந்து விளையாடுவதில் அவர்கள் சிறப்பானவர்கள். நான் முதன்முதலாக இங்கு 1980-ம் ஆண்டில் வந்த போது இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. அவர்களிடம் ஓரளவுக்கு நல்ல பந்து வீச்சு இருந்தது. அதன் பிறகு முரளிதரன் சுழற்பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

இலங்கை அணி 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதில் முரளிதரனின் பங்கு முக்கியமானதாக இருந்தது. மற்ற சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட முரளிதரன் தூண்டுகோலாக இருந்தார். அதனால் அந்த அணி உலக அரங்கில் ஒரு சக்தியாக உருவானது. இந்த தொடர் சவாலானதாகும்.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

Story first published: Tuesday, August 11, 2015, 11:09 [IST]
Other articles published on Aug 11, 2015
English summary
Team Director Ravi Shastri says the learning curve for the Indian side is over and it's time that the players start winning Test matches abroad by finding ways to get 20 wickets.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X