For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவமானங்களை சாதனையாக மாற்றிய ஜடேஜா..!! 2 மாதத்தில் மாறிய ராஜபுத்திர வீரன்

எட்ஜ்பாஸ்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜடேஜா சதம் விளாசி அசத்தினார்.

ஜடேஜாவின் சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. ஜடேஜா கடந்த இரண்டு மாதங்களாக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் உடலளவிலும் மனதளவிலும் ஏற்பட்ட காயத்தை ஜடேஜா எப்படி உடைத்து சாதித்தார் என்பதை தற்போது காணலாம்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் - ஜடேஜா படைக்க போகும் சாதனை.. 7 பேருக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்புஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் - ஜடேஜா படைக்க போகும் சாதனை.. 7 பேருக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு

ஜடேஜா மீதான எதிர்பார்ப்பு

ஜடேஜா மீதான எதிர்பார்ப்பு

கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் ஜடேஜா ரண்களை வாரிக் குவித்தார். குறிப்பாக டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 170 ரன்களுக்கு மேல் விளாசினார் . அதன் பிறகு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார் . இதனால் ஜடேஜா வேறொரு லெவலுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது . அடுத்த இந்திய அணி கேப்டனாக கூட ஜடேஜா வரலாம் என கிரிக்கெட் விமர்சனகள் கருதினர்.

விரிசல்

விரிசல்

ஆனால் ஐபிஎல் தொடர் ஜடேஜாவுக்கு இரங்கு முகத்தையே கொடுத்தது. தொடர் தோல்வி , கேப்டன்சி சொதப்பல் கேப்டன் பொறுப்பில் சுதந்திரம் இல்லாத நிலை போன்ற காரணங்களால் சென்னை அணி படு தோல்வியை சந்தித்தது . இதனை தொடர்ந்து ஜடேஜா கேப்டன்ஷிப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் . ஜடேஜா கேப்டன்ஷிப் பதவியில் செயல்பட்ட விதம் குறித்து தோனியும் விமர்சித்ததால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின .

பயிற்சி

பயிற்சி

அதன் பிறகு காயம் ஏற்பட்டதால் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகினார் . ஜடேஜாவை சிஎஸ்கே ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சனங்களும் கடுமையாக விமர்சித்தனர் . இதனால் இரண்டு மாதம் வெளி உலகத்திற்கு வராத ஜடேஜா இழந்த பெருமையையும், இழந்த பார்மையும் மீட்க கடுமையான பயிற்சிகளை எடுத்தார். இதற்கு ஜடேஜாவுக்கு நல்ல பலனும் கிடைத்தது . பயிற்சி ஆட்டத்தில் ஜடேஜா முதலில் லிங்க்ஸில் சொற்பரன்களில் ஆட்டம் இழந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதம் அடித்து நல்ல பயிற்சியை எடுத்துக் கொண்டார் .

புகழும் ரசிகர்கள்

புகழும் ரசிகர்கள்

இங்கிலாந்து நியூசிலாந்து தொடரில் நடுவரிசையில் விளையாடிய வீரர்கள் அதிக ரன்கள் விளாசினர். இதனை நோட்ஸ் எடுத்துக் கொண்ட ஜடேஜா நடுவரிசையில் பொறுப்பாக நிதானமாகவும் விளையாடினால் ரன்கள் நிச்சயம் கிடைக்கும் என முடிவெடுத்தார். நேற்று ஆட்டத்திலும் கூட அதிரடியாக ஆடும் வாய்ப்பு ஜடேஜாவுக்கு கிடைத்தாலும் விக்கெட்டுகளை இழந்து விடக்கூடாது என்பதற்காக ஆங்கர் ரோலை கையில் எடுத்தார். ஒருமுனையில் பண்ட் அதிரடி ஆட்டமும் மறுமுனையில் ஜடேஜா டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்டைலையும் கையில் எடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் மூலம் ஜடேஜா சதம் விளாசினார். தற்போது ஜடேஜாவை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

Story first published: Saturday, July 2, 2022, 22:43 [IST]
Other articles published on Jul 2, 2022
English summary
Ravindra Jadeja path to success after IPL debacle.. அவமானங்களை சாதனையாக மாற்றிய ஜடேஜா..!! 2 மாதத்தில் மாறிய ராஜபுத்திர வீரன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X