For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு காத்திருக்கு அதிர்ச்சி வைத்தியம்!

By Veera Kumar

ராஜ்கோட்: ஹைதராபாத் அணியுடனான ரஞ்சி கோப்பை சி பிரிவு லீக் ஆட்டத்தில், சவுராஷ்டிரா அணி 35 ரன் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் ரவீந்திர ஜடேஜா மொத்தம் 13 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்.

ஜடேஜா தனது சுழலால் கொடுக்கப்போகும் அதிர்ச்சி வைத்தியத்தில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலுள்ள தென் ஆப்பிரிக்கா துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

ஹைதராபாத்-சவுராஷ்டிரா

ஹைதராபாத்-சவுராஷ்டிரா

ராஜ்கோட்டில் நடந்த, ரஞ்சி கோப்பை சி பிரிவு லீக் ஆட்டத்தில் சவுராஷ்டிரா-ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த சவுராஷ்டிரா, முதல் இன்னிங்சில் 102 ரன்களில் சுருண்டது. சாகர் ஜோகியானி 51, கேப்டன் ஜெய்தேவ் ஷா 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஜடேஜா 6 விக்கெட்

ஜடேஜா 6 விக்கெட்

ஹைதராபாத் பந்துவீச்சில் மெகதி ஹாசன் 5, விஷால் ஷர்மா 4, ஆகாஷ் பண்டாரி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 148 ரன்னில் ஆட்டமிழந்தது. கொல்லா சுமந்த் 41, பவநாகா சந்தீப் 24, அநிருத் 21 ரன் எடுத்தனர். சவுராஷ்டிரா பந்துவீச்சில் ஜடேஜா 6, மக்வானா 4 விக்கெட் வீழ்த்தினர்.

2வது இன்னிங்ஸ்

2வது இன்னிங்ஸ்

46 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 2வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 215 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. சிராக் ஜனி அதிகபட்சமாக 65 ரன் எடுத்தார். ஹைதராபாத் பந்துவீச்சில் மெகதி ஹாசன் 5, விஷால் ஷர்மா 4 விக்கெட் வீழ்த்தினர்.

ஜடேஜா மீண்டும் அசத்தல்

ஜடேஜா மீண்டும் அசத்தல்

இதையடுத்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது ஹைதராபாத். ஆனால், ரவீந்திர ஜடேஜாவின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 40 ஓவர்களில், 134 ரன்களில் அந்த அணி ஆல்-அவுட் ஆனது. சந்தீப் 46, அக்‌ஷத் 26, சுமந்த் 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஜடேஜா 20 ஓவர் பந்துவீசி 2 மெய்டன் உள்பட 60 ரன்னுக்கு 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

ஜடேஜா செம

ஜடேஜா செம

சவுராஷ்டிரா அணி 6 புள்ளிகளை தட்டிச் சென்றது. 2 இன்னிங்சிலும் சேர்த்து 13 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இப்போட்டி இரண்டே நாளில் முடிவுக்கு வந்தது. முதல் போட்டியில் ஜடேஜா வீழ்த்திய விக்கெட்டையும் சேர்த்தால், வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் 24 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா உஷார்

தென் ஆப்பிரிக்கா உஷார்

இதனிடையே ஜடேஜா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 11 பேர் கொண்ட அணியில் ஜடேஜா விளையாடினால், அது தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு பெரும் நெருக்கடியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, October 24, 2015, 11:39 [IST]
Other articles published on Oct 24, 2015
English summary
One bowler who has dominated this Ranji Trophy like nobody else is left-arm spinner Ravindra Jadeja. On the strength of his 24 wickets from the first two rounds.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X