For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை.. ரோகித் எடுத்த தவறான முடிவால் தோல்வி.. புவிக்கு வாய்ப்பு தராதது ஏன்?

செயிண்ட் கிட்ஸ்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 138 ரன்கள் எடுத்தது.

139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஒரே போட்டியில் 3 பெரும் சாதனைகள்.. ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்தியா.. ரசிகர்கள் பாராட்டுஒரே போட்டியில் 3 பெரும் சாதனைகள்.. ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்தியா.. ரசிகர்கள் பாராட்டு

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

இதனையடுத்து கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஸ்வர் குமார் 2 ஓவர்களை மட்டுமே வீசி இருந்த நிலையில், அவருக்கு கடைசி ஓவரை தராமல் ரோகித் சர்மா ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனால் ஆவேஷ் கான் முதல் பந்தே நோ பால் வீசி அதிர்ச்சி அளித்தார்.

வீணடித்த ரோகித்

வீணடித்த ரோகித்

இதனையடுத்து அடுத்த 2 பந்தில் ஒரு சிக்சர், 1 பவுண்டரி விளாசி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. ரோகித் சர்மா, இதுவே புவனேஸ்வர் குமாருக்கு கடைசி ஓவரை வழங்கி இருந்தால், இந்தியா வெற்றி பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால் ரோகித் சர்மா வீணடித்து விட்டார். இதனால் தொடரும் தற்போது சமனாகி விட்டது.

ரோகித் சர்மா விளக்கம்

ரோகித் சர்மா விளக்கம்

இந்த நிலையில், தனது முடிவு குறித்து விளக்கம் அளித்துள்ள ரோகித் சர்மா, புவனேஸ்வர் குமார் அனுபவமிக்க வீரர். அவர் எப்படி பந்துவீசுவார் என அனைவருக்கும் தெரியும். ஆனால் இளம் வீரர்களுக்கு இது போன்ற நெருக்கடியான கட்டத்தில் பந்துவீச வாய்ப்பு கொடுத்தால் தான், அவர்களுடைய திறமை வெளிப்படும். அனுபவம் கிடைக்கும் என்ற காரணத்தால் தான் வாய்ப்பு வழங்கினேன்.

அச்சப்பட தேவையில்லை

அச்சப்பட தேவையில்லை

இது குறித்து அச்சப்பட தேவையில்லை. நாங்கள் பேட்டிங்கில் பெரிய இலக்கை நிர்ணயிக்க தவறிவிட்டோம். பந்துவீச்சாளர்கள் குறித்து எனக்கு மகிழ்ச்சி தான். பேட்டிங்கில் தான் எங்களுக்கு சில கவலைகள் இருக்கின்றன. ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததால், என்னுடைய நிலைப்பாட்டை மாற்றி கொள்ள மாட்டேன், நாங்கள் செய்ய நினைத்ததை கண்டிப்பாக செய்வோம்.

Story first published: Tuesday, August 2, 2022, 16:16 [IST]
Other articles published on Aug 2, 2022
English summary
Rohit sharma decision to bowl avesh khan is turning point of the match கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை.. ரோகித் எடுத்த தவறான முடிவால் தோல்வி.. புவிக்கு வாய்ப்பு தராதது ஏன்?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X