For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிக்கி பாண்டிங் ரெக்கார்ட முறியடிக்கறதுக்கு ஹிட்மேனுக்கு ஒரு சதம்தான் பாக்கி... வெல்டன்!

புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் துவங்கியுள்ளது.

இந்த போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்கி ஹிட்மேன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஆடி வருகின்றனர்.

இந்நிலையில் ரிக்கி பாண்டிங்கின் ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் சாதனையை வீழ்த்த ரோகித் சர்மாவிற்கு ஒரு சதமே மீதமுள்ளது.

ஒருநாள் போட்டி துவக்கம்

ஒருநாள் போட்டி துவக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோஷியேஷன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

ரோகித் -ஷிகர்

ரோகித் -ஷிகர்

இந்த போட்டியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் விளையாடி வருகின்றனர். 13 ஓவர்கள் முடிவில் இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை இந்திய அணிக்கு கொடுத்துள்ளனர். ரோகித் சர்மா மற்றும் ஷிகர் இருவரும் இணைந்து நிதானமான ஆட்டத்தை அளித்து வருகின்றனர்.

ரோகித்திற்கு ஒரு சதம் பாக்கி

ரோகித்திற்கு ஒரு சதம் பாக்கி

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் ரிக்கி பாண்டிங்கின் அதிக சதங்கள் சாதனையை பூர்த்தி செய்ய ரோகித் சர்மாவிற்கு இன்னும் ஒரு சதமே மீதமுள்ளது. ஒருநாள் போட்டிகளில் மட்டும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 30 சதங்களை அடித்துள்ளார்.

பாண்டிங் சாதனைக்கு முயற்சி

பாண்டிங் சாதனைக்கு முயற்சி

இந்தளவில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா 29 சதங்களை அடித்துள்ளார். இந்நிலையில் இந்த போட்டியில் அல்லது இந்த தொடரில் ரோகித் சர்மா சதத்தை அடிக்கும் நிலையில், ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்வார். இன்றைய போட்டியில் 13 ஓவர்களின் முடிவில் ரோகித் சர்மா 23 ரன்களை அடித்துள்ள நிலையில், பாண்டிங்கை எட்டி பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, March 23, 2021, 17:24 [IST]
Other articles published on Mar 23, 2021
English summary
Rohit sharma need one ton to reach Ricky ponting's record
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X