160 கூட வராதுனு நினைச்சேன்.. கார்த்திக் பிண்ணிட்டாரு.. நடுவரிசை வீரர்களுக்கு ரோகித் எச்சரிக்கை

டிரிண்டாட் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தங்களது அணி 160 ரன்களை கூட எட்டாது என்று நினைத்தேன் என்று ரோகித் சர்மா கூறினார்.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில், வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா பாராட்டுகளையும், எச்சரிக்கைகளையும் கூறியுள்ளார்.

தோனியின் சாதனையை முறியடித்த தினேஷ் கார்த்திக்.. டி20 கிரிக்கெட்டில் எந்த இந்தியரும் செய்யலதோனியின் சாதனையை முறியடித்த தினேஷ் கார்த்திக்.. டி20 கிரிக்கெட்டில் எந்த இந்தியரும் செய்யல

கடினமான ஆடுகளம்

கடினமான ஆடுகளம்

இது குறித்து பேசிய அவர், ஆடுகளத்தின் தன்மையை பார்த்த உடனே தெரிந்தது. இந்த ஆடுகளத்தில் பெரிய ஷாட்களை ஆடுவது எளிதான காரியமாக இருக்காது என்று . தொடக்கத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தது. இதனால் முதலில் பேட் செய்பவர்கள் நீண்ட நேரம் நின்று விளையாட வேண்டும் என்பதை உணர்ந்தோம். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் கொஞ்சம் ஒத்துழைப்பை கொடுத்தது.

பாராட்டு

பாராட்டு

ஆடுகளம் போக போக பந்து பேட்டிற்கு மெதுவாக தான் வந்தது. இதனால் 160, 170 ரன்களை அடிப்பதே கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் தினேஷ் கார்த்திக் இறுதியில் சிறப்பாக விளையாடி 190 ரன்களை அடித்தது மிகவும் பிரமிக்க வைத்தது. கடினமான ஆடுகளத்தில் கடைசி வரை நின்று, எங்கள் திறமைகளை நம்பினோம்.

உத்தரவாதம் கிடையாது

உத்தரவாதம் கிடையாது

முதல் 6 ஓவர், போட்டியின் நடுவே மற்றும் இறுதியில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து முன்பே முடிவு எடுத்தது தான். இந்த தொடரில் நாங்கள் சில வீரர்களுக்கு சில பொறுப்புகளை வழங்கி இருக்கிறோம். இன்று சிறப்பாக செய்தோம். ஆனால் எல்லா போட்டிகளிலும் இப்படி செய்ய முடியுமா என்று எந்த உத்தரவாதமும் தர முடியாது.

ரோகித் அறிவுரை

ரோகித் அறிவுரை

வித்தியாசமான முயற்சிகளை எடுக்கும் போது சில தோல்விகள் ஏற்படலாம். ஆடுகளத்தை பொறுத்து தான் நாம் எப்படி விளையாட போகிறோம் என்பதை தீர்மானிக்க வேண்டும். நடுவரிசை வீரர்கள் கொஞ்சம் நிலைத்து நின்று ஆட வேண்டும். பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அடுத்த போட்டியில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து முன்னேற வேண்டும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rohit sharma says he didn’t expect team to reach 160 odd runs160 கூட வராதுனு நினைச்சேன்.. கார்த்திக் பிண்ணிட்டாரு.. நடுவரிசை வீரர்களுக்கு ரோகித் எச்சரிக்கை
Story first published: Saturday, July 30, 2022, 12:25 [IST]
Other articles published on Jul 30, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X