For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யப்பா சாமி.. முடியலை.. பயங்கர பில்டப் கொடுத்து பல்பு வாங்கப் போகும் ஐபிஎல் அணி!

Recommended Video

IPL 2020 | RCB Changed new logo after huge hype

பெங்களூரு : ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது.

அதற்காக சமூக வலைதளத்தில் பில்டப் கொடுத்து வருகிறது. அந்த மாற்றம் என்ன என்பது பற்றிய தகவல் கசிந்து வரும் நிலையில், ரசிகர்கள் சிலர் அந்த அணியை கிண்டல் செய்தும் வருகின்றனர்.

இது வரை ஐபிஎல் வெல்லாத அந்த அணி, இந்த முறை பெயரை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல, பிராண்டு மதிப்பை மாற்ற சில முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

2௦20 ஐபிஎல் தொடர் அடுத்த மாத இறுதியில் துவங்க உள்ளது. அந்த தொடருக்காக பல்வேறு அணிகளும் தயார் ஆகி வருகின்றன. டிசம்பர் மாதம் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதில் பல வீரர்களை வாங்கிக் குவித்தன ஐபிஎல் அணிகள். அனைத்து அணிகளும் ஐபிஎல் கோப்பை வெல்வதற்காக பல்வேறு திட்டமிடல்களில் ஈடுபட்டுள்ளன.

கோப்பை வெல்லாத அணி

கோப்பை வெல்லாத அணி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை கோப்பை வெல்லாத அணியாக உள்ளது. அதிலும் கடந்த மூன்று ஐபிஎல் தொடர்களில், கோப்பை வெல்லும் தகுதி கொண்ட அணியாக கருதப்பட்டும் பிளே-ஆஃப் கூட செல்ல முடியாத நிலையில் இருந்தது அந்த அணி.

நட்சத்திர வீரர்கள்

நட்சத்திர வீரர்கள்

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி கேப்டனாக இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மற்றொரு சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ்-உம் இடம் பெற்றுள்ளார். இவர்கள் இருவரை மட்டுமே அந்த அணி அதிகம் சார்ந்து இருக்கிறது. அதுவே அந்த அணிக்கு பாதகமாகவும் மாறி விட்டது.

ராயல் சேலஞ்சர்ஸ் அணி மாற்றம்

ராயல் சேலஞ்சர்ஸ் அணி மாற்றம்

இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டனர். அதே போல, அணியின் இயக்குனர் பதவியில் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் பயிற்சியாளராக கருதப்படும் மைக் ஹெஸ்ஸன் நியமிக்கப்பட்டார். இது அந்த அணிக்கு பெரிய மாற்றம் தரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சமூக வலைதள மாற்றம்

சமூக வலைதள மாற்றம்

இந்த நிலையில், இரு நாட்கள் முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அனைத்து சமூக வலைதள பக்கங்களும் திடீர் மாற்றத்தை சந்தித்தன. அனைத்து பக்கங்களிலும் அந்த அணியின் லோகோ காணாமல் போனது. அதே போல, பழைய பதிவுகள் அனைத்தும் காணாமல் போனது.

கோலி பதிவு

கோலி பதிவு

இதைக் கண்ட அந்த அணியின் கேப்டன் விராட் கோலி, அனைத்து பதிவுகளும் காணாமல் போனது குறித்து கேப்டனுக்கே சொல்லவில்லை என தன் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், ஏதாவது உதவி தேவை என்றால் என்னிடம் கேட்கவும். என்றும் கூறி இருந்தார் கோலி.

டிவில்லியர்ஸ் பதிவு

டிவில்லியர்ஸ் பதிவு

அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ்-உம் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். நம் சமூக வலைதள கணக்குகளுக்கு என்ன ஆனது? இது ஏதேனும், ஒரு திட்டம் காரணமாக விடப்பட்ட இடைவேளை என்று நம்புகிறேன் என்று கூறி இருக்கிறார்.

என்ன மாற்றம்?

என்ன மாற்றம்?

சமூக வலைதளங்களில் பயங்கர பில்டப் கொடுத்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தன் அணியின் பெயரை மாற்ற உள்ளதாக தெரிகிறது. அதுவும் பெரிய அளவில் எல்லாம் இல்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரை, ராயல் சேலஞ்சர்ஸ் "பெங்களூரு" என மாற்ற உள்ளது.

ஏன் இந்த முடிவு?

ஏன் இந்த முடிவு?

இந்த முடிவை எடுக்க காரணம் ரசிகர்கள் தான் என கூறப்படுகிறது. பெங்களூர் என்பது அந்த நகரின் பழைய பெயர் ஆகும். பெங்களூரு என்ற உண்மையான கன்னட பெயரை அணியில் சேர்த்தால் ரசிகர்களை அதிக அளவில் ஈர்க்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாம் அணி நிர்வாகம்.

பில்டப் தேவையா?

பில்டப் தேவையா?

இந்த சின்ன மாற்றத்துக்கு இத்தனை பெரிய பில்டப் தேவையா? என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இத்துடன் லோகோவையும் மாற்ற உள்ளது அந்த அணி. சிலர் கோப்பை வெல்வது தான் முக்கியம், பெயர் மாற்றுவது எல்லாம் இல்லை என கூறி உள்ளனர்.

Story first published: Thursday, February 13, 2020, 14:02 [IST]
Other articles published on Feb 13, 2020
English summary
Royal Challengers Banglore to change its name. but fans want IPL title.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X