என்ன பெரிய மனுசு பா.. 7 சிக்சர் அடித்து பவுலருக்கு ருத்துராஜ் ஆறுதல்.. நம்பிக்கை வார்த்தை

மும்பை : விஜய் ஹசாரோ கோப்பை கிரிக்கெட் தொடரில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி அசத்தியிருக்கிறார்.

நடப்பு சீசனில் அவர் ஐந்து போட்டிகளில் விளையாடி 660 ரன்கள் விளாசி இருக்கிறார். இதில் நான்கு சதங்கள் அடங்கும்.

இந்த தொடரில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 220 ரன்கள் விளாசி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக அவர் லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ருத்துராஜ் கெய்க்வாட் 15 சதம் மற்றும் 16 அரைசதம் அடித்திருக்கிறார்.

14 ஆண்டுகள் காத்திருப்பு.. சாதித்து காட்டிய உனாத்கட்.. விஜய் ஹசாரே தொடரை வென்ற செளராஷ்டிரா! 14 ஆண்டுகள் காத்திருப்பு.. சாதித்து காட்டிய உனாத்கட்.. விஜய் ஹசாரே தொடரை வென்ற செளராஷ்டிரா!

சிவா சிங் ஓவர்

சிவா சிங் ஓவர்

தமது அணியை தனியாக பேட்டிங் மூலம் இறுதிப் போட்டி வரை ருத்துராஜ் கெய்க்வாட் அழைத்து வந்துள்ளார். மேலும் இந்த தொடருக்கான நாயகன் விருதும் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்தது. இந்த நிலையில் உத்தரபிரதேசம் அணிக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில ருத்துராஜ் கெய்க்வாட் 220 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். இதில் 49 வது ஓவரில் உத்தரபிரதேச சுழற்பந்துவீச்சாளர் சிவா சிங் வீசிய ஏழு பந்துகளில் ஏழு சிக்ஸர்களை ருத்துராஜ் விளாசி சாதனை படைத்தார்.

பாதிப்பு

பாதிப்பு

இந்தப் போட்டி நடைபெற்ற சில நாட்கள் ஆனாலும் அதன் பிறகு ருத்துராஜ் செய்த ஒரு காரியம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிவா சிங் என்பவர் 2018 ஆம் ஆண்டு அண்டர் 19 கிரிக்கெட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளராக விளையாடி அனைவரும் கவனத்தில் ஈர்த்தவர் .எனினும் விஜய் ஹசாரே தொடரில் 7 சிக்ஸர்கள் அவர் ஓவரில் தான் ருத்துராஜ் அடித்தார். இதனால், அவருடைய உத்வேகம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும்.

பிராட் வாழ்க்கை

பிராட் வாழ்க்கை

இதனால் அவர் சோர்வு அடைந்து விடக்கூடாது என்பதற்காக ருத்துராஜ் அவருக்கு ஒரு மெசேஜ் அளித்துள்ளார். அதில் அனைத்து பந்துவீச்சாளர்களுமே அவர்கள் ஓவரில் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்தால் நிச்சயம் ஏமாற்றமாக இருக்கும். அவர்களுக்கு நான் ஒன்றே ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் தொடர்ந்து ஆறு சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். ஆனால் அதன் பிறகு தான் பிராடின் கிரிக்கெட் வாழ்க்கையே உச்சத்தை தொட்டது.

ருத்துராஜ் அறிவுரை

ருத்துராஜ் அறிவுரை

அதன் பிறகு அவர் அனைத்து போட்டிகளுமே சிறப்பாக விளையாடி நம்பர் ஒன் வீரராக இருக்கிறார். எனவே அனைத்து பந்துவீச்சாளர்களும் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ருத்துராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து தாம் ஆடியதில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் என்றால் எது என ருத்துராஜ் கெய்க்வாட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கால் இறுதியில் இரட்டை சதம் அடித்ததை தான் கூறியிருக்கிறார்.

நெருக்கடி இருந்தது

நெருக்கடி இருந்தது

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ருத்துராஜ், அசாம் பந்துவீச்சாளர்களை நான் குறைவாக மதிப்பிடவில்லை. ஆனால் அவர்களை விட உத்தர பிரதேச அணி அனைத்து விதத்திலும் சிறந்து பந்துவீச்சு உடைய அனியாக விளங்கினார்கள். காலிறுதி ஆட்டத்தில் அவர்கள் இரண்டு விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி விட்டார்கள். நான் காயத்திலிருந்து அந்தப் போட்டியில் திரும்பி விளையாடினேன் .அதுவும் என்னுடைய முதல் நாக் அவுட் போட்டி. எனவே அந்த போட்டியில் எனக்கு கடும் நெருக்கடி இருந்தது. இதனால் உத்தர பிரதேச அணிக்கு எதிராக இரட்டை சதம் நான் அடித்ததையே சிறந்த இன்னிங்ஸ் ஆக கருதுகிறேன் என்று கூறியுள்ளார். ருத்துராஜ் கெய்க்வாட் பவுலர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ruturaj Gaikwad advices to the bowler who gives 7 sixers என்ன பெரிய மனுசு பா.. 7 சிக்சர் அடித்து பவுலருக்கு ருத்துராஜ் ஆறுதல்.. நம்பிக்கை வார்த்தை
Story first published: Friday, December 2, 2022, 18:58 [IST]
Other articles published on Dec 2, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X